Bride Escape: மத்திய பிரதேசம்: பியூட்டி பார்லருக்கு செல்வதாக கூறிவிட்டு காதலனுடன் தப்பிய மணமகள்.. மணிக்கணக்காக காத்திருந்த மணமகன்

மத்திய பிரதேசத்தில் பியூட்டி பார்லருக்கு சென்று வருகிறேன் என கூறி விட்டு மணமகள் காதலருடன் தப்பிய நிலையில், இது தெரியாத மணமகன் மணமகளுக்காக பலமணி நேரம் காத்திருந்து உள்ளார்.

Continues below advertisement

மத்திய பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு இரு வீட்டாரும் நேற்று மாலை தயாராகி கொண்டிருந்தனர். இந்தநிலையில், மணமகள் தனது குடும்பத்தினரிடம், தான் பியூட்டி பார்லருக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார்.

Continues below advertisement

அவருக்காக, மணமகன், உறவினர்கள்உள்ளிட்ட பலரும் மணிக்கணக்காக காத்திருந்து உள்ளனர். வெகு நேரம் ஆகியும் மணமகள் திரும்பி வரவில்லை. மணமகனின் சகோதரர் சென்று மணமகள் வீட்டாரிடம் மணமகள் எப்போது வருவார் என்று கேட்டு உள்ளார்.அதற்கு அவர்கள் அவள் அழகுப்படுத்தி கொள்வதற்காக பார்லருக்கு சென்று உள்ளார் என்றும் எந்த நேரத்திலும் மணமகள் திரும்பி விடுவார் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால், மணமகள் திருமணத்திற்கு முன்பே தனது காதலருடன் தப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார், கொத்வாலி காவல் நிலையத்திற்கு சென்று, மணமகளை காணவில்லை என புகார் அளித்து உள்ளனர். போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி. அவருடைய மகன் விநாயகம் . கட்டிட மேஸ்திரி. இவருக்கும், அவருடைய உறவினரான வாணியம்பாடி பகுதியை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்களது திருமணம் கடந்த 2019-ஆம் ஆண்டு குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இரவு மணமக்கள் அழைப்பு நடந்து முடிந்த நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் திருமண வீடு களைகட்டியது. தாலிகட்டும் நிகழ்ச்சிக்காக மணமேடை தயார் ஆனது. மணப்பெண்ணுக்கு திருமண சடங்கு நடைபெற்றது. பின்னர் திருமண பட்டுச்சேலை கட்டிவர மணப்பெண் அறைக்கு சென்றார்.

பட்டுச்சேலை கட்டி வரச்சென்ற மணமகள் நீண்ட நேரமாகியும் வராததால் உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். மணமகள் அறைக்கு சென்று பார்த்த போது அவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பெண் ஏற்கனவே படிக்கும் போது சக மாணவனைக் காதலித்தாகவும், விஷயம் தெரிந்ததால், அந்தப் பெண்ணின் பெற்றோர் வலுக்கடாயமாக வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததாகாவும் கூறப்பட்டது.

அந்தப் பெண் சுவர் ஏறிக் குதித்து அங்கிருந்து காதலனுடன் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றொர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் படிக்க

CSK's road to IPL 2023 Winner: தோல்வியில் தொடக்கம்.. பிளே ஆஃப்பில் நடுக்கம்.. இறுதியில் கோப்பையுடன் பதக்கம்.. சிஎஸ்கே கடந்து வந்த வெற்றிப்பாதை!

TN Rain Alert: இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இளையங்குடியில் கொட்டிய மழை..! இன்றைய வானிலை எப்படி?

 

Continues below advertisement