நடிகை சுனைனா நடித்துள்ள ரெஜினா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சுனைனா, முன்னணி நடிகர்களின் படங்களில் பெரிதாக நடிக்காவிட்டாலும், தனக்கென பாராட்டைக் கொடுக்கும் கேரக்டர்களில் தேடிப் பிடித்து நடித்து வருகிறார். தமிழில் வம்சம், பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம், திருத்தனி, மாசிலாமணி, நீர்ப்பறவை, சமர், யாதுமாகி, வன்மம், நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன், காளி, எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி, தொண்டன், ட்ரிப், எஸ்டேட் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
நடிகர் விஜய்யின் தெறி படத்தின் சிறப்பு தோற்றத்திலும் நடித்தார் சுனைனார். இவர் கடைசியாக கடந்தாண்டு டிசம்பரில் வெளியான விஷால் நடித்த லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதையும் படிங்க: Actor Sakthivel: ஹெல்மெட் போடலைன்னா ஃபைன்.. ஆனால் சாலை...? - பிரபல சின்னத்திரை நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்!
இதனைத் தொடர்ந்து சுனைனா, ‘ரெஜினா’என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் ‘பைப்பின் சுவத்திலே பிராணாயம்’ , பிரித்விராஜ், ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கியவராவார். ரெஜினா படத்தில் நிவாஸ் அதிதன், ரிது மந்திரா, அனந்த் நாக், தினா, விவேக் பிரசன்னா, பாவா செல்லதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சதீஷ் நாயர் இசையமைத்து இப்படத்தை தயாரித்துள்ளார்.
ரெஜினா படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது. இதனிடையே இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதை கணிக்க முடியாத வகையில் டீசர் எடிட் செய்யப்பட்டுள்ளது.
அந்த டீசரின் தொடக்கத்தில் வங்கி கொள்ளை ஒன்றும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகியிருக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது. அதேசமயம் ‘ரெஜினா’ படம் திரைக்கு வரும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.