தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.


இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தியும் வெற்றியும் அறையில் இருக்கும்போது, ரங்கநாயகி அனைவருடனும் வந்து வெற்றிக்கு ஹேப்பி பர்த்டே சொல்ல, சக்தி ஒளிந்து கொள்கிறாள்.


பிறகு வெற்றி நனைந்திருக்க, ரங்கநாயகி ஏன் நனைஞ்சிருக்க என்று கேட்க, வெற்றி சமாளிக்கிறான். அறையெல்லாம் நீர் கால்தடம் இருக்க, பூஜா என்ன என்று பார்க்க வர, வெற்றி அதற்குள் அதை மாப் போட்டுத் துடைக்கிறான்.


சக்தி மீண்டும் வந்த வழியே போகப் பார்க்க, அங்கே கயிறு இல்லை. வெற்றி ஒரு ப்ளான் செய்து, ஒரு பெட்டில் சக்தியைப் படுக்க வைத்துச் சுற்றி, தூக்கிக் கொண்டு போக முயற்சி செய்ய, ரோஹித் உதவுகிறான். ஆனால் பூஜா வெற்றியை நிறுத்தி, பெட்டை திறந்து காண்பிக்கச் சொல்கிறாள்.


இதனால் ரங்கநாயகி அதிர்ச்சியாக,பெட்டில் யாரும் இல்லை! சக்தி மறைந்து இருக்கிறாள் என்று சொல்ல அனைவரும் பூஜாவை திட்டி அனுப்ப, அவள் போனதும் சக்தியை வெளியே அனுப்புகிறான் வெற்றி.


ஷக்தி பூஜாவைப் பார்த்து, நீ சந்தேகப்பட்டது சரிதான், நான்தான் வந்தேன், இன்னும் வருவேன், முடிஞ்சா நிரூபி என்று சொல்லிவிட்டுப் போகிறாள்.இதனால் பூஜா டென்ஷனாகிறாள்.






மறுநாள் வெற்றிக்கும் சக்திக்கும் ஒரே நேரத்தில் காய்ச்சல் வர, ஷவரில் நனைந்ததால் தான் இப்படி என்று அனைவரும் கிண்டல் செய்ய, வெற்றியும் சக்தியும் ஹாஸ்பிடலுக்கு வருகிறார்கள். அங்கே தற்செயலாக அடியாளை சக்தி பார்க்க, வெற்றி சக்தி இருவரும் அவனைப் பிடித்து, பைக்கில் கட்டி ரோடெல்லாம் இழுத்துக்கொண்டு வந்து போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கிறார்கள்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்லலாம்.


மேலும் படிக்க


Vijayakanth: ‘விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை; இன்னும் 14 நாட்கள் தேவை’ .. மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு


Uttarkashi Tunnel Rescue: 17 நாட்கள் இருட்டில் நடந்தது என்ன? - விவரிக்கும் மீட்கப்பட்ட தொழிலாளி விஸ்வஜீத் குமார்


Virat Kohli: மார்ச் வரை ரெஸ்ட்! டி20, ஒருநாள் போட்டிகளில் ப்ரேக் எடுக்கும் விராட் கோலி? ரசிகர்கள் அப்செட்..