ரசிகர்களை கவர்ந்த 'ஃப்ரெண்டஸ்' டிவி தொடர்:


இந்தியாவில் பல ஆங்கில சீரிஸ்கள் பிரபலமாக இருக்கின்றன. அதில், அனைவரையும் கவர்ந்தது அமெரிக்க டிவி தொடரான ’Friends'.  இந்த தொடர் 1994 முதல் 2004 வரை ஒளிபரப்பட்டது. தற்போது ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இத்தொடருக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. மொத்த 10 சீசன்கள், 236 எபிசோட்களை கொண்ட இந்த தொடரில் இடம்பெற்ற அத்தனை கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம். அதாவது, நியூ யார்க்கில் இருக்கும் ஆறு நண்பர்களையும் அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும் வைத்து இந்த தொடர் உருவாக்கப்பட்டது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து இறுதி தொடர் வரை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது.


சாண்ட்லராக கலக்கிய மேத்யூ பெர்ரி: 


ஆறு கதாபாத்திரங்கள் இருந்தாலும், அதில் தனது காமெடியால் அனைவரையும் கவர்ந்தவர் மேத்யூ பெர்ரி. இவர் இந்த தொடரில் 'Chandler Bing’ என்ற கதாபாத்திரத்தில், தனது தனித்துவமான காமெடியால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தார். குறிப்பாக, பிரண்ட்ஸ் தொடரில் ஜோயி ட்ரிபியானி கதாபாத்திரத்துடன் சாண்ட்லர் கதாபாத்திரம் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. மேலும், இருவரும் சேர்ந்து கோழி குஞ்சு மற்றும் வாத்தை வளர்ப்பது, சாண்ட்லரின் உடைகளை ஜோயி அணிவது, புகை பழக்கத்தை விட சாண்ட்லர் மேற்கொள்ளும் முயற்சிகள், தோழியாக உள்ள மோனிகா கதாபாத்திரத்துடன் லண்டனில் செய்யும் சம்பவங்கள், அதை சக நண்பர்கள் கண்டுபிடிப்பது என சொல்லி கொண்டே போகலாம்.


மேத்யூ பெர்ரி உயிரிழந்தார்:


இப்படி ரசிகர்களை கவர்ந்த மேத்யூ பெர்ரி உயிரிழந்துவிட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  இவருக்கு வயது 54. மேத்யூ பெர்ரி, தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் பேச்சு மூச்சின்றி, அவர்  கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் ஆனால், அது எதுவுமே பலன் அளிக்கவல்லை என்றும் கூறப்படுகிறது. 


மேத்யூ பெர்ரி, Friends தொடரில் நடித்து கொண்டிருக்கும் போதே, அவருக்கு போதை குடிப்பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. குடிப்பழக்கத்தில் இருந்து இவர் மீள்வதற்கு 19 முறை மறுவாழ்வு மையத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மறுவாழ்வு மையத்திற்கு சென்றபோதும், அவரால் இந்த பழக்கத்தில் இருந்து வெளியே வர இயலவில்லை. இந்நிலையில், தான் மேத்யூ பெர்ரி உயிரிழந்துள்ளார்.


கடைசி இன்ஸ்டா பதிவு:


மேத்யூ பெர்ரி 5 நாட்களுக்கு முன்பு  நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இவரது கடைசி இன்ஸ்டா பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  அந்த புகைப்படத்தில் வெள்ளை நிற துண்டு அணிந்துகொண்டு, ஹெட்ஃபோன்களை போட்டுக் கொண்டு இருப்பது போன்று புகைப்படத்தில் பெர்ரி உள்ளார். இந்த வெவெதுப்பான நீரில் இருப்பது உங்களை நன்றாக உணர வைக்கிறதா? என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் மேத்யூ பெர்ரி.


ALSO READ | Kerala Blast: கேரளாவில் கிறிஸ்தவர்கள் ஜெபக்கூட்டத்தில் டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்பு.. ஒருவர் உயிரிழப்பு