'Breaking Bad', 'Better Call Saul' தொடர்களில் ஹெக்டர் சாலமான்கா என்ற கதாபாத்தித்தில் நடித்த மார்க் மார்கோலிஸ் (83 வயது) காலமானார். மார்க் மார்கோலிஸ் நியூயார்கில் இருக்கும் மருத்துவமனையில் நோய்த்தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக, அவரது மனைவி மற்றும் மகன் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.






"பிரேக்கிங் பேட்" நட்சத்திரம் பிரையன் க்ரான்ஸ்டன் இன்ஸ்டாகிராமில் தனது இரங்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில்  " என் நண்பர் மார்க் மார்கோலிஸ் காலமானதை அறிந்து வருத்தமடைந்தேன். நல்ல நடிகரையும் தாண்டி நல்ல மனிதர். நல்ல நகைச்சுவை திறன் கொண்டவர். ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.  


பிரேக்கிங் பேட் சமூக ஊடக பிரிவில் "மார்க் மார்கோலிஸ் தனது கண்கள், மணி மற்றும் மிகக் குறைவான வார்த்தைகளால் ஹெக்டர் சலமன்காவை தொலைக்காட்சி வரலாற்றில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் ஒன்றாக மாற்றினார் என்பது பாராட்டுதலுக்குரியது” என குறிப்பிட்டுள்ளது.  


மார்க் மார்கோலிஸ் நவம்பர் 26, 1939 இல் பிலடெல்பியாவில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தாயார் ஃபன்யா, வால்பேப்பர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும் அவர் நல்ல ஓவியரும் கூட. அவரது தந்தை இசிடோர், தொழிற்சாலை தொழிலாளி ஆவர்.  14 வயது முதல் நடிப்பில் ஆர்வம் காட்டத்தொடங்கி அதற்கான பயிற்சியை மேற்கொண்டார். பின் நியூயார்க்கிற்கு சென்று தி ஆக்டர்ஸ் ஸ்டுடியோவில் அட்லருடன் நாடகம் பயின்றார். முதன்முதலில் 1976 ஆம் ஆண்டு The Opening of Misty Beethoven  என்ற படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து பல படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்த அவர், மெல்ல மெல்ல ஹாலிவுட்டில் தனது கால் தடத்தை பதித்தார். Black swan போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல், பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். ஆனால் சமீபத்தில் வெளியான மிகவும் பிரபலமான ”பிரேக்கிங் பேட்” மற்றும் "பெட்டர் கால் சால்" ஆகிய தொடர்களில் ஹெக்டர் சாலமான்கா என்ற  கதாப்பாத்திரம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஹெக்டர் கதாப்பாத்திரம் மக்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது.


Brunei Sultan Assets: யாருய்யா நீ? 7000 கார்கள், நொடிக்கு ரூ.5,277 வருமானம், முடிவெட்ட ரூ.15 லட்சம் - புருனே சுல்தானின் சொகுசு வாழ்க்கை