7000-க்கும் அதிகமான கார்கள், மகள் பிறந்த நாளுக்கு விமானத்தையே பரிசாக வழங்கும், புருனே சுல்தானின் வாழ்வியல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


சொகுசு வாழ்க்கை: 


கோடிஸ்வரர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தத்தமது விருப்பங்களுக்கு ஏற்ப சொகுசு பயணம், பிரமாண்ட வீடுகள், பிரத்யேகமான கார்கள் போன்ற பல்வேறு விதங்களில் தங்களது வாழ்க்கையை கொண்டாடி வருகின்றனர். அவர்கள் அனைவரையும் மிஞ்சும் விதமாக உள்ளது புருனே சுல்தான் ஹஸனல் போக்கியா முயுசுதீன் வாதுலாவின் சொகுசு வாழ்க்கை. 


புருனே சுல்தான்:


எண்ணெய் வளம் கொழிக்கும் புருனே, கடந்த 1967ம் ஆண்டு தனி நாடாக உருவானது. அன்று தொடங்கி தற்போது வரை அந்நாட்டின்  சுல்தான் (மன்னர்) ஆக தொடர்ந்து வருகிறார்  ஹஸனல் போக்கியா முயுசுதீன் வாதுலா. இதனால், அவரது வருவாய் என்பது பலரையும் வியப்படைய செய்துள்ளது. ஒரு நாளைக்கு அவரது வருவாய் மட்டும் ரூ.5,277 என கூறப்படுகிறது. இதனால், அவரது வார வருவாய் மட்டும் மூவாயிரத்து 191 கோடி ரூபாய் என கணக்கிடப்படுகிறது. இவரது மொத்த சொத்து மதிப்பு என்பது இந்திய ரூபாயில் 2.3 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இங்கிலாந்தின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பிறகு அரச பதவியில் இருந்த நபர், என்ற பெருமையும் ஹஸனல் போக்கியா பெற்றுள்ளார். புருனேவின் மன்னராக கடந்த 2017ம் ஆண்டு அவர் 50 வருடங்களை பூர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது. 


பிரமாண்ட அரண்மனை:


90-களில் தொடங்கி 2008ம் ஆண்டு வரை உலகின் பணக்கார நபராக இருந்தவர் தான் ஹஸனல் போக்கியா. Istana Nurul Iman என்ற பெயரிலான இவரது பிரமாண்ட அரண்மனை சுமார் 46 ஏக்கர் பரப்பளவில், அந்நாட்டின் தலைநகர் bandar seri begawan-ல் அமைந்துள்ளது. அரண்மனை மேற்கூரை முழுவதும் 22 கேரட் தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.2, 250 கோடி மதிப்பிலான இந்த அரண்மனை தான் உலகில் உள்ள அரண்மனைகளில் மிகப்பெரியதாக கருதப்படுகிறது. இந்த அரண்மனையில் மொத்தமாக 1, 788 அறைகள் உள்ளன. 275 அடம்பர குளியலறைகளும், 5 நீச்சல் குளங்களும் உள்ளன. அதோடு அந்த அரண்மனையில் உள்ள பொருட்கள் அனைத்துமே தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்டவை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


விமானம் பரிசு:


ஹஸனல் போக்கியா தனது வெளிநாடுகள் பயணத்திற்காக ரூ.3000 கோடி மதிப்பிலான போயிங் 747 விமானத்தை பயன்படுத்தி வரும் நிலையில், தனது மகளின் 18வது வயது பிறந்தநாளுக்கு ஏர்பஸ் ஏ-320 விமானத்தை பரிசாக வழங்கியுள்ளார். தற்போதும் ஒரு முறை முடி வெட்டுவதற்காக மட்டுமே அவர் 15 லட்சம் வரை செலவு செய்து வருவதாக சில ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.  மேற்குறிப்பிட்ட எல்லாவற்றையும் தாண்டி, ஹஸனல் போக்கியாவை வியந்து பார்க்கச் செய்வது அவரிடம் உள்ள கார்களை வாங்கி குவிக்கும் பழக்கம் தான்.


இன்னொரு சுவாரஸ்யம் இதோ இருக்கு:


Karuththarajapalayam: கான்க்ரீட் வீடு வேணாம், உசுறுதான் முக்கியம்.. படிகட்டுக்கு நோ, தச்சர்களே இல்லாத கருத்தராஜபாளையம் - சாமி குத்தம்னு பதறும் மக்கள்


7000 கார்கள்:


ஹஸனல் போக்கியாவின் அரண்மனையில் உள்ள கேரேஜில் மட்டும் 7000 கார்கள் அணிவகுத்து நிற்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றின் மதிப்பு மட்டுமே அதிகபட்சமாக 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 72 ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. 


கார்களின் விவரங்கள்:


அவரிடம் உள்ள கார்களின் ரோல்ஸ் ராயல்ஸ் தான் அதிகம் என கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தில் இருந்து மட்டும் 604 கார்களை வைத்துள்ளாராம். அதோடு, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 574 கார்களையும், பெரார் நிறுவனத்தைச் சேர்ந்த 452 கார்களையும், ஆஸ்டின் மார்ட்டின் நிறுவனத்தைச் சேர்ந்த 300 கார்களையும், பென்ட்லீ நிறுவனத்தைச் சேர்ந்த 382 கார்களையும் தன் வசம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று, பி.எம்.டபள்.யூ நிறுவனத்தைச் சேர்ந்த 209 கார்களையும், ஜாகுவார் நிறுவனத்தைச் சேர்ந்த 179 கார்களையும், போர்ஷெய் நிறுவனத்தைச் சேர்ந்த 160 கார்களையும், கோனிநெக் 134 கார்களையும், லாம்போர்க்கினி 21 கார்களையும், மெக்லாரன் எஃப் 1 ரகம் 8 கார்களையும், பியூஜோ நிறுவனத்தின் 5 கார்களையும், ஷெல்பி சூப்பர் நிறுவனத்தின் ஒரு காரையும் இவர் தன் வசம் வைத்துள்ளார். இவற்றில் சில கார் மாடல்கள் உலகில் வேறு எந்த நபரிடமும் இல்லாதவை. வெறும் கான்செப்ட் மாடல் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்களை எல்லாம், பிரத்யேகமாக தனக்காக வடிவமைக்கச் செய்து தனதாக்கியுள்ளார். 


கோடியில் ஊதியம்:


மேலே குறிப்பிடப்பட்ட விலையுயர்ந்த கார் மாடல்கள் மட்டுமின்றி, வெவ்வேறு நிறுவனங்களை சேர்ந்த நான்காயிரம் கார்களையும் அவர் சொந்தமாக வைத்துள்ளார். அவற்றை தனது அரண்மனைக்கு அருகே உள்ள விமான நிலையத்தின் ஒரு பகுதியில் நிறுத்தி வைத்துள்ளார். அந்த பார்க்கிங் பகுதிகளுக்கு, அந்தந்த கார் நிறுவனங்களின் பெயரையே சூட்டியுள்ளார். அவற்றை பராமரிப்பதற்கு என தனித்தனியே மெக்கானிக்குகளை பணியமர்த்தி, உணவு, இருப்பிடத்துடன் கை நிரம்ப ஊதியமும் வழங்கி வருகிறார். குறிப்பிட்ட சில கார் மாடல்களின் மெக்கானிக்குகளுக்கு ஆண்டிற்கு ரூ.1.15 கோடி ஊதியமாக வழங்கப்படுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதோடு, 200 குதிரைகளும் ஏசி வசதியுடன் பராமரித்து வருகிறார். இதோ, 30 வங்கப்புலிகள் உள்ளிட்ட உயிரினங்கள் அடங்கிய தனி, உயிரியல் பூங்காவையே நடத்தி வருகிறார்.