தமிழ்நாடு:



  • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ரூ,7,500 ஊக்கத்தொகை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சி சுவாதி நேரில் ஆஜராக விலக்கு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவ

  • தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள், கோவை ஐ.ஜி சுதாகர் உள்ளிட்ட 27 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

  • பாஜகவை எதிர்க்கும் திமுக என்எல்சிக்கு மட்டும் ஏன் ஆதரவாக இருக்கிறது என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

  • ரவீந்திரநாத் எம்.பி வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம்

  • உணவகங்களில் ஹூக்கா பார் வைத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

  • மதுரவாயல் துறைமுகம் ஈரடுக்கு மேம்பால பணி தீவிரம் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

  • பதவியேற்ற பின் முதன்முறையாக 4 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார் குடியரசு தலைவர்

  • தமிழ்நாட்டில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.12.50 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியா: 



  • அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட ராகுலின் சிறை தண்டனைக்கு தடை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 

  • சந்திரபாபு நாயுடு கலந்துகொண்ட கூட்டத்தில் தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது.

  • ராகுலின் சிறை தண்டனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் "என்ன நடந்தாலும் கடமையை தொடர்ந்து செய்வேன். இந்தியாவின் கருத்தாக்கத்தை பாதுகாப்பேன்" என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • மத்திய பிரதேசத்தில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ. மகன் பழங்குடியின இளைஞரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட்டம்

  • நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி அமைதியா இருங்க; இல்லனா வீட்ல ED ரெய்டு விட்டிருவேன் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

  • நாடாளுமன்றத்தில் டெல்லி சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய அமித்ஷா, நேருவை மேற்கோள் காட்டி பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.


உலகம்: 



  • தாய்லாந்தில் சரக்கு ரயில் காரின் மீது மோதியதில் 8 பேர் உயிரிழப்பு.

  • சீனாவின் ராணுவ நடவடிக்கையால் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க நியூசிலாந்து திட்டமிட்டுள்ளது.

  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் ரஷ்ய அதிகாரிகளுக்கு புதின் உத்தரவு.

  • பாகிஸ்தானில் நாடாளுமன்ற முன்கூட்டியே கலைக்கப்போவதாக பிரதமர் ஹபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். 

  • சீனாவில் செல்போன்கள் பயன்படுத்த குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.


விளையாட்டு:



  • ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

  • உலக செஸ் தரவரிசைப் பட்டியலில் விஸ்வ்நாதன் ஆனந்தைப் பின்னுக்குத் தள்ளி 9 வது இடம் பிடித்து தமிழ்நாடு வீரர் குகேஷ் சாதனை படைத்துள்ளார்.

  • இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இரு அணிகளும் தாமதமாக பந்துவீசியதாக கூறி ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

  • ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி : தென்கொரியா- பாகிஸ்தான் ஆட்டம் டிராவில் முடிந்தது.