Mark Antony Movie: மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு காரணம் அஜித் தான் என படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். 


விஷால், எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் கடந்த 15ஆம் தேதி வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தில் ஹீரோயினாக ரித்து வர்மா நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை போன்ற தோற்றத்தில் இருக்கும் பெண்ணை நடிக்க வைத்துள்ளனர். டைம் டிராவல் ஜானரில் காமெடியாக எடுத்து இருக்கும் மார்க் ஆண்டனி படம் வசூலிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


இதுவரை ரூ.70 கோடி வரை வசூலாகி உள்ளதால் பாக்ஸ் ஆபிசில் ரூ, 100 கோடியை இப்படம் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க் ஆண்டனி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் சென்னையில் படக்குழு சார்பில் சக்சஸ் மீட்டிங் நடைபெற்றது. அதில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றிருந்தனர்.


நிகழ்வில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், “மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு அஜித் சார் தான் காரணம். நேர்கொண்ட பார்வை படத்தின் போது அஜித் சாரை பார்க்கும் போது அதிக நம்பிக்கை கொடுத்தார். உன்னால் முடியும், பெரிய படம் பண்ணு என எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தவர் அஜித் சார் தான்.


எஸ்.ஜே. சூர்யா சாரால் படம் பயங்கர எனர்ஜியாக இருந்தது. காலை 6 மணிக்கு ஷூட்டிங் தொடங்கும், ஷூட்டிங் மாலை 6 மணி வரை நடைபெறும். ஆனாலும் ஃபுல் எனர்ஜியோட சூர்யா சார் இருப்பார். சார் இது ஏன் அப்படி, இதுக்கு அப்பறம் இது ஏன் இப்படி இருக்கு என கேள்வி கேட்டு கொண்டிருப்பார். படத்தில் சில்க் மேம் லுக்கை திரையில் கொண்டுவர மிக சவாலாக இருந்தது. சிறியதாக தப்பு நடந்தாலும் எல்லாமே தவறாக போயிடும். விஷ்ணு பிரியாவின் நடிப்புக்கும் மேலே, சில்க் மேம் லுக் சரியாக வர சிஜி வேலைக்கு மிகுந்த சிரமப்பட்டோம். 


நானும் விஷாலும் அண்ணன் தம்பியாக தான் பழகி வந்தோம். நான் விஷால் அண்ணாவிடம் இரவு 1.30 மணிக்கு கதை சொன்னேன். உடனே கதை நன்றாக இருக்கிறது என்ற விஷால் உடனே அடுத்தக்கட்ட செயலில் ஈடுபட்டார். தயாரிப்பாளர் வினோத் சாரும் கதை கேட்டு நல்லா இருக்கு என்றார். இதனால் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை எண்ணி எனக்கு பயம் தான் அதிகம் ஆனது. எந்த பின்புலமும் இல்லாத எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தவர்களுக்கு மிகுந்த நன்றி” என்றார். 


மேலும் படிக்க: Baakiyalakshmi: இன்னும் என்னென்ன குடுத்து வைச்சு இருக்க... வீடேறி வந்து பாக்கியாவை அவமானப்படுத்தும் கோபி... பாக்கியலட்சுமியில் இன்று!


October Cine Updates: தலைவர் முதல் தனுஷ் வரை... அக்டோபரில் குவியும் டாப் டக்கர் ஹீரோக்களின் அப்டேட்டுகள்!