லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் மேலும் சில முக்கியமான நிகழ்வுகளை பார்க்கலாம்.

தலைவர் 170

தற்சமயம் ரஜினிகாந்த் தனது தலைவர்170 படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்க, அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கிய் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வருகின்ற அக்டோபர் மாதம் இந்தப் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

 

KH233

எச். வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் திரைப்படம் KH233. இந்தப் படத்திற்கு கமல்ஹாசன் பயிற்சி துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்துக் கொள்ளும் வீடியோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் படத்திற்கான புரோமோ வீடியோவும் வெளியிடப்பட இருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது.

விடாமுயற்சி

மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி . படத்தின் டைட்டில் வெளியாகி வெகு நாட்களாக எந்த வித தகவலும் வெளியாகாத நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதம் துபாயில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை  நெருங்கியுள்ளது. சூர்யா கதாநாயகனாக நடிக்க திஷா பதானி கதாநாயகியாக நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முடிவுக்கு வர இருக்கிறது.

D50

தனது 50-வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். விஸ்வாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் இந்தப் படத்தில் சமீபத்தில் இணைந்தார். மேலும் இசையமைப்பாளர் தேவா இந்தப் படத்தில் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் மற்றும் நித்யா மேனன் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மூன்று சகோதரர்களை மையப்படுத்திய மிகப்பெரிய கேங்ஸ்டர் கதையான இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது . இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் நிறைவுக்கு வர இருக்கிறது.

சிவகாத்திகேயன் 21

ராஜ்கமல் நிறுவன தயாரிக்கும் சிவகார்த்திகேயன் 21 ஆம் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இதில்  நடித்து வருகிறார்கள். ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள் நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி அக்டோபர் மாதம் நிறைவடைய இருக்கிறது.

ஆக மொத்தம் அக்டோபம் மாதம் சீரும் சிறப்புமாக போகப் போகிறது.


மேலும் படிக்க : Cauvery Water: ”தண்ணீரை திறந்தே ஆக வேண்டும்”...தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக களமிறங்கிய உச்ச நீதிமன்றம்!

Crime: சிக்கிய பிரபல ஓட்டல்.. வரிசை கட்டி நின்ற இளம் பெண்கள்.. கொத்துக்கொத்தாய் போதை மாத்திரைகள்! போலீஸ் அதிரடி