லவ்வர்


பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துள்ள படம் லவ்வர். ஸ்ரீ கெளரி பிரியா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கண்ணா ரவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது முதல் வாரத்தில் ஆறு கோடி வசூலித்து, தற்போது இரண்டாவது வாரமும் படத்திற்கு வரவேற்பு இருந்து வருகிறது.


டாக்ஸிகாக இருக்கும் காதலன் அவனது செயல்கள் பிடிக்கவில்லை என்றாலும் அவனை காதலிக்கும் பெண் என இந்த 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் என அனைவருக்கும் தொடர்புபடுத்தி பார்க்கும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளது. அருண் மற்றும் திவ்யா கதாபாத்திரத்தை மணிகண்டன் மற்றும் கெளரி பிரியா தங்களது நடிப்பால் முழுமை சேர்த்திருக்கிறார்கள்.


ஒரு காதல் உறவு முடியும் கட்டத்துக்கு நுழைவதில் இருந்து, அது மொத்தமாக முடியும் வரை இப்பத்தின் கதை அமைந்திருக்கிறது. இடையிடையில் அருண் மற்றும் திவ்யா கல்லூரியில் பார்த்துக் கொண்ட அவர்கள் காதலிக்கத் தொடங்கிய காட்சிகள் இடம்பெறுகின்றன. ஆனால் அருண் மற்றும் திவ்யா தங்களது காதலை வெளிப்படுத்தும் காட்சி படத்தில் ஏன் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு ஒரு மனக்குறையாக இருந்து வந்தது. இப்படியான நிலையில் அருண் மற்றும் திவ்யா தங்களது காதலை வெளிப்படுத்தும் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.


லவ்வர் டிலிடட் சீன்






இந்தக் காட்சியில் அருண் படத்தில் இருப்பது போல் அதே மாதிரிய பொஸசிவான ஒரு அளாக தான் நடந்துகொள்கிறான். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அவன் அப்படி இருப்பதை திவ்யா ரசிக்கிறாள். அருண் அப்படி அவளிடம் இருப்பதை திவ்யா ரசித்து வேண்டுமென்றே அவனை சீண்டுகிறாள். இந்தக் காட்சி படத்தில் இடம்பெற்றால் அது சொல்ல வந்த கதைக்கு எதிரானதாக அமைந்து விடும் என்று படக்குழு இதை நீக்கியிருக்கலாம் என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.




மேலும் படிக்க : Ethirneechal: ஜனனி கேட்ட கேள்விக்கு ஆடிப்போன குணசேகரன்: சொத்தைப் பிடுங்க போட்ட பிளானா? எதிர்நீச்சலில் இன்று!


D50 First Look: தனுஷ் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. நேரம் குறித்த சன் பிக்சர்ஸ் - எப்போ தெரியுமா?