மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் நாளை (30 ஆம் தேதி) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்ட படக்குழு சென்னைக்கு திரும்பி ரசிகர்களோடு படம் பார்க்க காத்திருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட இயக்குனர் மணிரத்னத்திடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன அவற்றிற்கு ஸ்வாரஸ்யமான பதிலகளை அளித்தார்.



பார்த்திபனை எப்படி கண்ட்ரோல் செய்தீர்கள்?


பார்த்திபன் இந்த திரைப்படத்தில் சின்ன பழுவெட்டரையராக நடித்திருக்கிறார் என்பதால் அவர் குறித்து ஒருவர் கேட்டார். எப்போதுமே அதிகமாக பேசக்கூடிய பார்திபனை எப்படி கண்ட்ரோல் செய்தீர்கள் என்று கேட்டபோது, "பார்த்திபன் ஒரு ஜெம். அவரே ஒரு இயக்குனர். அவருக்கு தெரியும் எதை எப்போது செய்யவேண்டும் எதை எப்போது செய்யக்கூடாது என்று. அவருக்கு மொத்த கதை எங்க போகுதுன்னு தெரியும். அதுல அவர் பாகம் என்னன்னும் தெரியும்", எனக்கூறினார். 


தொடர்புடைய செய்திகள்: பவர் தெரியாம விளையாடிட்டு இருக்கீங்க...ஊடகத்தினரை எச்சரிக்கும் TTF வாசன்


சைவம், வைணவம் குழப்பம்


மேலும் இந்த படத்தின் ட்ரெய்லரின் போது பலரும் எழுப்பிய கேள்வி சோழர்களை சைவர்களாக காட்டியிருக்கிறார்களா, வைணவர்களாக காட்டியிருக்கிறார்களா என்று சந்தேகம் எழுப்பினர். அதற்கு காரணம் இந்த படத்தில் அவரவர்கள் நெற்றியில் வைத்திருக்கும் திலகம்தான். பட்டை நாமம் குழப்பம் எல்லோருக்கும் இருந்தது. அது குறித்து பேசிய அவர் எல்லாவற்றிற்கும் பதில் படத்தில் உள்ளது என்றார். கல்கி எழுதிய அனைத்தும் படத்தில் இடம்பெறும். அதற்கு முன் முன்முடிவுகளுக்கு வரவேண்டாம் என்று கூறினார். 



கமல் தான் எக்ஸாம்பில்


மேலும் பேசிய அவர், "கதை நம்மிடம் ஏற்கனவே இருக்கு, கல்கி எழுதி வச்சுட்டு போயிருக்காரு. அதுல நாம எப்படி ஸ்க்ரீன்பிளே பண்ணலாம்ன்னு தான் யோசிச்சேன். கண்டிப்பா வெப் சீரிஸ் பண்ற அளவுக்கு பெரிய ஸ்கோப் இருக்கு. ஆனா நான் கதையை படிக்கும்போது இத பெரிய ஸ்க்ரீன்ல ப்ரம்மண்டமா பாக்கதான் நெனச்சேன். முன்னாடி இவ்வளவு டெக்னாலஜீஸ் இல்ல. இப்போ நிறைய வந்துடுச்சு. அதனாலதான் அது இவ்வளவு நாள் நடக்காம இப்போ நடக்குதுன்னு நினைக்குறேன்", என்றவரிடம், படம் அவுட் வந்ததுக்கு அப்புறம் கண்ணுக்கு தெரிவதெல்லாம் மிஸ்டேக்ஸாதான் இருக்கும் என்று கூறியதை நினைவு கூர்ந்து பொன்னியின் செல்வனில் கண்டுபிடித்தீர்களா என்று கேட்டபோது, "அது வெளியீட்டுக்கு பிறகு, இப்போ தெரிஞ்சாதான் மாத்திடலாமே, அது ஒரு பிராசஸ், அது வெளியானதுக்கு அப்புறம் எனக்கே புரியும். அது போக இதை நம்ம ரெண்டு பாகமா எடுக்குறோம். அதனால லெங்த் பத்தி மக்கள் கவலை படமாட்டாங்கன்னு நெனைக்குறேன். விக்ரம் எவ்வளவு நேரம் ஒடுச்சு? 2.50 மணிநேரம்… பாருங்க, நம்ம தலைவர் ஒருத்தர் எக்ஸாம்பில் கொடுத்துட்டு போயிருக்காருல்ல…", என்று கமல்ஹாசனை தலைவர் என்று குறிப்பிட்டார். உங்களுடைய புனைவாக, தொடர்ச்சியாக பொன்னியின் செல்வன் 3 ஆம் பாகம் வருமா என்று கேட்டதற்கு எல்லாரும் ஓடிடுவங்க என்று பதிலளித்தார்.