இயக்குனர் மிஷ்கின் தனது தனித்துவமான சினிமாவிற்கு பெயர் போனவர், அவருடைய படங்கள் எல்லாமே இவருக்கென உள்ள பாணியில் தனித்து தெரியும். அவர் படத்தில் இருந்து எந்த ஒரு காட்சியை ஒரு நிமிடம் ஓட விட்டாலே இது மிஷ்கின் சினிமா என்று கூற முடிந்த அளவுக்கு தனக்கென ஒரு மேக்கிங் பாணியை உருவாக்கி வைத்துள்ளார். இதில் பெருமளவு அகிரா குரசோவா போன்ற வெளிநாட்டு இயக்குனர்களின் தாக்கம் என்றாலும் தமிழ் சினிமாவில் இவர் பாணி புதியதுதான். இவர் வைக்கும் ஃபிரேம்கள், கேமரா அசைவுகள், நடிகர்களின் நடிப்பில் சிறிதளவு நாடகத்தன்மை, காலுக்கு ஷாட் வைப்பது என சில விஷயங்களை வேண்டுமென்றே திரும்ப திரும்ப செய்து தனது கற்பனை உலகை உருவாக்கி உள்ளார். 



மஞ்சள் புடவை


குறிப்பாக மஞ்சள் நிற புடவை அணிந்த இவர் திரைப்படங்களில் நடனம் ஆடும் பெண்கள் மிகவும் ஃபேமஸ். ஐட்டம் சாங் என்னும் கலாச்சாரத்தில் உள்ள ஆணாதிகத்தன்மை தற்போது விமர்சிக்கப் பட்டு வருவதால் பல முன்னணி இயக்குனர்கள் தவிர்த்து வரும் நிலையில் மிஷ்கினும் சமீபத்திய படங்களில் அதனை வைப்பதை நிறுதியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: பவர் தெரியாம விளையாடிட்டு இருக்கீங்க...ஊடகத்தினரை எச்சரிக்கும் TTF வாசன்


மிஷ்கினின் வாசிப்பு


இவையன்றி இவரது சினிமாக்கள் தனித்து தெரிவதற்கு காரணம் இவரது வாசிப்பு. தமிழ் மட்டுமின்றி உலக இலக்கியங்களை வாசிக்கும் இவரால் உணர்வுகளை ஆழமாக கடத்த முடிகிறது. அதே போல இவரது பேச்சுக்களும் கேட்பதற்கு அவ்வளவு ஸ்வாரஸ்யமாக இருக்கும். இவர் சிறுவயதில் ஆபாச புத்தகம் படித்ததையும், அதனை தனது அம்மா எப்படி எதிர்கொண்டார் என்றும் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். 



ஆபாச புத்தகம்


இது குறித்து அவர் பேசுகையில் "நான் ஒரு முறை ஸ்கூல் படிக்குற காலத்துல ஒரு 3 செக்ஸ் புக் வச்சு படிச்சிட்டு இருந்தேன். பக்கா செக்ஸ் புக் மூணுமே… அதை நான் என் டேபிள்ல வச்சு படிச்சுட்டு இருக்குறப்போ எங்க அம்மா வந்துட்டாங்க. உடனே அதை டேபிளுக்கு கீழ தள்ளி விட்டுட்டேன். அப்பாடான்னு அத அங்கேயே வச்சுட்டு உடனே வெளில கிரிக்கெட் விளையாட போய்ட்டேன். எங்கம்மா வீட்டை சுத்தம் செஞ்சி, கூட்டி பெருக்கிட்டு இருப்பாங்க போல. நான் திரும்பி வந்து பாக்குறேன், அந்த மூணு செக்ஸ் புக்கையும் எங்க அம்மா எடுத்து டேபிள் மேல கார்னர்ல அழகா அடுக்கி வச்சுருக்காங்க. என் வாழ்வில் சிறந்த நாள் அது. அப்போ எங்க அம்மாவை நான் ரொம்ப நாகரிகமா பாத்தேன்", என்றார். 


பிசாசு 2


2014 ஆம் ஆண்டு வெளிவந்த பிசாசு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பிசாசு 2 என தயாரிக்கப்படுகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராக்போர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் முருகானந்தம் தயாரித்திருக்கிறார். ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமீதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஜ்மல் உள்ளிட்டவர்களோடு விஜய் சேதுபதியும் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. வழக்கமாக மிஷ்கின் படங்களில் சிறப்பம்சமாக இருக்கும் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் இந்த டிரைலரிலும் சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து இருந்தனர்.