மாரி செல்வராஜ் இயக்கத்தில், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் உருவான இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த மாதம் 29 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்புப் பெற்றது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50-வது நாள் ஆகும் நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து மாரி செல்வராஜ் தனது டிவிட்டர் பதிவில், அந்த எல்லைகள் எதுவாக இருந்தாலும் உடைத்தோம். 50-வது நாளை கொண்டாடுகிறோம் என பதிவிட்டுள்ளார். 






முன்னதாக சென்னையில் நடைபெற்ற `மாமன்னன்' படத்தின் நன்றி தெரிக்கும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "ஒரு நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடி நாங்க கொடுத்த விளம்பரத்தைவிட நீங்க அதிக விளம்பரம் கொடுத்துட்டீங்க. இவ்வளவு பெரிய வெற்றிக்கு நீங்கள்தான் காரணம். 




மலை மேல் நின்று வடிவேலு அண்ணன் அழும்போது படம் பார்க்கிற யாரும் அழாமல் இருந்திருக்க முடியாது. அப்படியொரு நடிப்பை கொடுத்திருக்கிறார். வடிவேலு அண்ணன் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை என்றால் இந்தப் படம் வேண்டாம். வேற படம் ஏதாவது பண்ணலாம் என்று மாரி சார்கிட்ட சொன்னேன். `மாமன்னன்' 50-வது நாள் விழா தான் என்னுடைய சினிமா பயணத்தின் கடைசி மேடையாக இருக்கும். முதல் படமும் வெற்றி. கடைசி படமும் வெற்றி. இப்போ ”சென்ட் ஆப்” பண்ணிக்கோங்க" என்று உருக்கமாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொருவரும் தங்களுக்கான கதாப்பாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருந்தனர். குறிப்பாக நடிகர் பகத் பாசில், வடிவேலு நடிப்பில் மிரட்டி இருந்தனர். இவர்களின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. முதல் நாள் மாமன்னன் திரைப்படம் இந்தியா முழுவதும் 5.50 கோடிகள் வசூலித்ததாக தகவல் வெளியான்னது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி மாமன்னன் திரைப்படம் 10 நாட்களில் ரூ. 54.9 கோடி ரூபாய் வசூலித்ததாக தெரிவித்திருந்தார். 


மேலும் படிக்க


Blue Sattai Maran: ‘என்ன ரங்கா ஜோக் காட்டுறியா?’ .. ரஜினியுடனான கசப்பான சந்திப்பு..ப்ளூ சட்டை மாறன் வீடியோ இதோ..!


MP Thirumavalavan Birthday: பெரியார் - அம்பேத்கர் கருத்துகள்.. வளப்படுத்துபவர் திருமா.. முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து