சுரேஷ் கோபி


மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. மோகன்லால், மம்மூட்டி போன்ற நடிகர்களுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் சுரேஷ் கோபிக்கு இருக்கிறது. பாஜகவைச் சேர்ந்தவரான இவர், குழந்தை நட்சத்திரமாக  தன் திரைப்பயணத்தைத் தொடங்கி, இதுவரை சுமார் 250 படங்கள் வரை நடித்துள்ளார்.


தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த ‘தீனா’ படத்தில், நடிகர் அஜித்துக்கு அண்ணனாக சுரேஷ் கோபி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் சரத்குமாருடன் சமஸ்தானம் , விக்ரம் நடித்த ஐ, விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன் ஆகிய படங்களில் நடித்தார். நடிகராக மட்டுமில்லாமல் பாடகராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் சுரேஷ் கோபி. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ராஜ்ய சபா எம்.பி ஆக கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் சுரேஷ் கோபி.






இந்நிலையில் சுரேஷ் கோபியின் இல்லத் திருமணமான அவரது மகள் பாக்யா சுரேஷ் கோலாகலத் திருமணம் பேசுபொருளாக மாறியுள்ளது. மலையாள சினிமாத் துறை மட்டுமில்லாமல் பிற திரைத் துறையின் உச்ச நட்சத்திரங்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


குடும்பத்துடன் வாழ்த்த வந்த மம்மூட்டி மோகன்லால்






இந்தத் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக மம்மூட்டி தனது மனைவி சுல்ஃபத் உடனும், மோகன்லான் தனது மனைவி சுசித்ராவுடனும் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.


வாழ்த்து தெரிவித்த பிரதமர்


வரும் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் நிலையில் தற்போது இந்தியா முழுவதிலும் இருக்கும் புகழ்பெற்ற வைணவ தளங்களுக்கு சென்று வருகிறார் பிரதமர் மோடி. இப்படியான  நிலையில் இரண்டு நாட்கள் பயணமாக இன்று கேரளா வந்து சேர்ந்தார்.


வந்ததும் புகழ்பெற்ற குருவாயூர் கோயிலுக்குச் சென்று மூலவரை தரிசனம் செய்து கோயிலை சுற்றிவந்த பிரதமர் மோடி அடுத்தபடியாக, சுரேஷ் கோபியின் மகள் பாக்யா சுரேஷின் திருமணத்திற்கு வருகை தந்தார். இருபது நிமிடங்கள் இந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மனமக்களுக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.




மேலும் படிக்க: Ayalaan Making Video: ஏலியனாக நடித்த நபர், மொத்தம் 4,500 ஷாட்கள்: வியக்கவைக்கும் ‘அயலான்’ மேக்கிங் வீடியோ!


Captain Miller Vs Ayalaan: பொங்கல் வசூல் ரேஸில் முந்தியது அயலானா, கேப்டன் மில்லரா? சுடச்சுட பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!