பாலிவுட்டில் கதாநாயகியாக இருப்பவர் மலைக்கா அரோரா. இவர் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் இடம்பெற்ற தக்க தையா தையா பாடலுக்கு நடனமாடி பிரபலமானார். இவர் சல்மான் கானின் சகோதரரான அர்பாஸ் கானை 1998ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.


ஆனால் அர்பாஸுடன் எழுந்த கருத்து வேறுபாட்டால் 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதனையடுத்து பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருடன் தற்போது காதலில் இருந்துவருகிறார்.


இந்நிலையில், மலைக்கா அரோரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,  “எனக்கு எந்த உடை அணிந்தால் நன்றாக இருக்கும் எது அணிந்தால் நன்றாக இருக்காது என்பது எனக்கு மட்டுமே தெரியும். எதுவாகினும் ஒரு பெண் அணியும் ஆடை அவருக்கு வசதியாக இருக்க வேண்டும்.


மேலும் வாசிக்க: "சட்டவிரோதமாக எல்லையை கடக்க வேண்டாம்; மனம் பதறுகிறது" - குளிரில் இறந்துபோன இந்திய குடும்பத்தினருக்கு ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல்!



Malaika Arora Outfit: ட்ரெஸ் சைஸ் வச்சி முடிவு பண்றாங்க..! உடை குறித்து கொதித்தெழுந்த மலைக்கா அரோரா


நான் அணியும் ஆடை குறித்து எல்லா நேரத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு பெண் எப்போதுமே அவளது பாவாடையின் நீளம் அல்லது கழுத்துப்பகுதியின் சரிவைக் கொண்டு மற்றவர்களால் தீர்மானிக்கப்படுகிறாள். என் ஹெம்லைன் அல்லது என் நெக்லைன் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்து என்னால் என் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்க முடியாது. அது அவசியமும் இல்லாதது. 


ஆடை அணிவது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். நான் யாருக்கும் ஆணையிட முடியாது. எனது தனிப்பட்ட தேர்வுகள் எனது தனிப்பட்ட விருப்பங்களாகவும், நேர்மறையாகவும் இருக்க வேண்டும்.  நான் ஒன்றும் முட்டாள் அல்ல. 


Cryptocurrency Malware: படம் டவுன்லோடில் அபாயம்! புதிய வைரஸை களமிறக்கும் மோசடி கும்பல் - கிரிப்டோ கரன்சிக்கும் குறி!!




உடைகளை தேர்ந்தெடுப்பது என் விருப்பம்.  அதுகுறித்து என்னிடம் சொல்வதற்கோ, கேட்பதற்கோ யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. என் தோலிலும், உடலிலும், வயதிலும் நான் வசதியாக இருப்பதாக உணர்ந்தால் அது அப்படியே இருக்கட்டும். அது மிகவும் எளிமையானது” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண


 


 


கடந்த வாரம்தான் பிறந்தநாள்.. இன்று அவன் இல்லை - 26 வயது மகன் தற்கொலையால் நொறுங்கிப் போன நடிகை!