இயக்குநர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் - நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த படம் “குண்டூர் காரம்”. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீ லீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களிடம் மிகப்பெரிய வெற்றிபெற்று வசூலை அள்ளிய குண்டூர் காரம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
கதை
ஆளும் கட்சியின் தலைவரான பிரகாஷ்ராஜ், தனது மகளாக ரம்யா கிருஷ்ணனை அமைச்சராக்க நினைக்கிறார். இது பிடிக்காத சக அரசியல்வாதியான சேர்ந்த ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணனின் முந்தைய கால வாழ்க்கை பற்றிய விவரங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டுகின்றனர். கடந்த காலத்தில் கொலை வழக்கில் தன்னுடைய கணவர் ஜெயராம் ஜெயிலுக்கு சென்று விட, மகன் மகேஷ் பாபுவை விட்டு விட்டு தந்தையின் வற்புறுத்தலால் வேறொரு திருமணம் செய்து கொள்கிறார் ரம்யா.
இதனிடையே ரம்யா கிருஷ்ணன அரசியல் வாழ்க்கைக்கு பாதகம் வந்துவிடக் கூடாது என்பதால் பிரகாஷ்ராஜ் ஒரு திட்டம் போடுகிறார். ஜெயிலில் 25 வருட சிறை தண்டனை பெற்று ரிலீசாகி வரும் ஜெயராம், தனது மகன் மகேஷ் பாபுவுடன் வாழ்ந்து வருகிறார். மகேஷ் பாபுவை அழைத்து வந்து தனது அம்மாவுக்கும் மகனுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை ஆவணங்களில் கையெழுத்திட மறுக்கிறார். இதனால் மகேஷ் பாபுவுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இறுதியாக தனது அம்மா ரம்யா கிருஷ்ணனுடன் உறவை மகேஷ் பாபு முறித்துக் கொண்டாரா இல்லை இருவரும் ஒன்றிணைந்தனரா என்பதே குண்டூர் காரம் படத்தின் கதையாகும்.
ஓடிடி ரிலீஸ்
திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குண்டூர் காரம். மேலும் இந்தியளவில் 123 கோடிகளை பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் செய்தது. திரையரங்கத்தைத் தொடர்ந்து தற்போது இப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இதனால் மகேஷ் பாபு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.
மேலும் படிக்க : Bigg Boss Archana: "கூடவே வந்த பேய், அலறி அடிச்சு ஓடினேன்" - பீதியான அனுபவம் பகிர்ந்த பிக்பாஸ் அர்ச்சனா!