விடாமுயற்சி


மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி  வெளியானது. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 


விடாமுயற்சி படத்திற்கு ஒரு தரப்பினரிடம் இருந்து நெகட்டிவான விமர்சனங்கள் வந்தாலும் இன்னொரு தரப்பினர் படத்தை பாராட்டியுள்ளார்கள். வழக்கமான ஸ்டார் நடிகரின் படம் என்றால் ஒரு பஞ்ச் டயலாக், ஓப்பனிங் பாடல் என்று கமர்சியல் தனம் ஆங்காங்கே இருக்கும், ஆனால் அப்படிப்பட்ட  படமாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. 


இதையும் படிங்க: சில இயக்குநர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்...விடாமுயற்சி நடிகை ரெஜினா வெளிப்படை


மகிழ் திருமேனி:


இந்த படத்திற்கு முதல் நாளில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இரண்டாம் நாள் முதல் பாசிட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கின, இந்த நிலையில் தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த இயக்குனர் மகிழ் திருமேனி படத்தின் வெற்றி குறித்து பேசியுள்ளார். படத்தை எடுத்து முடிச்சுட்டோம், படமும் இப்போ ரிலீஸ் ஆகிருச்சு, இதை நாம் ஒப்பனா சொல்றேன் அஜித் சார் மகிழ்ச்சியா இருக்காரு, தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியா இருக்காங்க,  படத்தினால் சுபாஸ்கரன் சார் மகிழ்ச்சியா இருக்காங்க, ஒரு இயக்குனரா நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன், அஜித் சாருடைய உண்மையான ரசிகர்களுக்கு படம் பிடிச்சிருக்கு, நடுநிலையான ரசிகர்களுக்கு படம் பிடிச்சிருக்கு, இதுக்கு மேல என்ன வேணும் எனக்கு? என்றார் மகிழ் திருமேனி. 






வசூலில் எவ்வளவு: 


விடாமுயற்சி திரைப்படம்  வெளியான முதல் நான்கு நாட்களில் 62.75 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில், வெளிநாடுகளில் மொத்தமாக இதுவரை 32 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் மூலம், இப்படம் சர்வதேச அளவில்சுமார் 94.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. படத்தின் மீது இருந்த பெரும் எதிர்பார்ப்பால், வெளியான ஒரு சில நாட்களிலேயே 100 கோடி ரூபாய் எனும் வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் வார இறுதியை கடந்த பிறகும் அப்படத்தின் வசூல், எதிர்பார்த்தபடி 100 கோடியை தாண்டவில்லை. அதோடு, காதலர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் மட்டும், 9 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதனால், விடாமுயற்சிக்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது.