விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்.
ஒரு தரப்பினரிடம் இருந்து விடாமுயற்சி படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் வந்தாலும் இன்னொரு தரப்பினர் படத்தை பாராட்டியுள்ளார்கள். வழக்கமான ஸ்டார் நடிகரின் படமாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது படத்தின் பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது
நடிகை ரெஜினா பேட்டி
அஜித்தின் தோற்றம் , நடிப்பு, அனிருத்தின் இசை என ரசிகர்கள் கொண்டாட நிறைய விஷயங்கள் இப்படத்தில் உள்ளன. அதே அளவிற்லு படத்தில் ரெஜினா நடித்துள்ள நெகட்டிவ் ரோல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த கதாபாத்திர உருவாக்கத்தையும் அதில் அவர் திறம்பட நடித்த விதத்தையும் பலர் பாராட்டியுள்ளார்கள். அந்த வகையில் சமீபத்தில் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் ரெஜினா பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
நிறைய் இயக்குநர்கள் என்னை ஏமாற்றினார்கள்
பொதுவாக பெரிய ஸ்டார்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருப்பதில்லை. நிறைய படங்களில் மோசமாக எழுதப்பட்டிருந்த பெண் கதாபாத்திரங்களைப் பார்த்து ஏமாற்றமடைந்தேன். விடாமுயற்சி படத்தில் இந்த கதாபாத்திரத்தில் என்னை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்று இயக்குநர் நம்பிக்கையளித்தார். ஒரு சிக்கலான கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியும் என்று நம்பியதற்கு அவருக்கு நன்றி. ஒரு படத்தில் பெண் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று பார்த்தாலே அந்த படத்தின் கதை எப்படியானது என உணரலாம். ஆனாலும் என்னை சில இயக்குநர்கள் ஏமாற்றிவிட்டார்கள். அதனால் ஒரு கதையில் ஒரு தனித்துவத்தை உணர்ந்தால் தான் அதில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன்" என ரெஜினா தெரிவித்துள்ளார்
குட் பேட் அக்லி
விடாமுயற்சி படம் வெளியான ஒரு சில மாதங்களில் அஜித் நடித்துள்ள மற்றொரு படமான குட் பேட் அக்லி வெளியாக இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரசன்னா , யோகி பாபு , த்ரிஷா , அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவீ மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது