பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது நாளின் 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் விசித்ரா மற்றும் ஜோவிகா விஜயகுமார் இடையே கடுமையான வாக்குவாதம் நடக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 


ஏற்கனவே இந்த வாரத்தில் சக போட்டியாளர்களிடம் பேசிய ஜோவிகா, தனக்கு படிப்பு வரவில்லை. அதனால் 9 ஆம் வகுப்புடன் நின்று விட்டேன்.அதேசமயம் நடிப்பு மீது ஆசை இருந்தால் தற்போது அதற்கான படிப்புகளை படித்து வருகிறேன் என தெரிவித்திருந்தார். அப்போது பேசிய விசித்ரா, என்ன இருந்தாலும் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றுக் கொண்டிருக்க வேண்டுமென அறிவுரை வழங்கினார். இதை பெரிதாக கண்டுக்கொள்ளாத ஜோவிகா, என்னோட படிப்பு பற்றி இனிமேல் பேசாதீங்க என வேண்டுகோள் விடுத்திருந்தார். 


ஆனால் பின்னர் யுகேந்திரன் வாசுதேவனுடனான உரையாடலின் போது ஜோவிகாவின் படிப்பு விஷயம் பற்றி பேசினார். இதற்கிடையில் நேற்றைய டாஸ்க்கின் போது பேசிய ஜோவிகா, “ என்னோட படிப்பு பற்றி 2 நாளா பேசிட்டு இருக்கீங்க. எனக்கு அது வரவில்லை. என்னோட அம்மா மிகவும் சப்போர்ட் செய்து எனக்கு என்ன வருமோ அதனை நான் கண்டிபிடிக்க உதவுகிறார். இங்க வந்த பிறகு தான் நான் ஜெயிச்சிருக்கேன். நான் ஸ்கூல்ல விவாத நிகழ்ச்சி எல்லாம் பண்ணனும்ன்னு ஆசைப்பட்டிருக்கேன். ஆனா பண்ண விடல. இந்த 3 நாள்ல நடந்ததை பார்க்குறப்ப எனக்கு அந்த திறமை இருக்குன்னு தெரியுது” என தன்னம்பிக்கையுடன் கண்ணீர் மல்க பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு கைதட்டல் கிடைத்தது. 






இப்படியான நிலையில் இன்று வெளியாகியுள்ள அந்த ப்ரோமோவில் பேசும் விசித்ரா, ”நான் ஜோவிகாவின் படிப்பு விஷயத்தில் தலையீட நினைக்கவில்லை. அடிப்படை கல்வியின் முக்கியத்துவம் பற்றி தான் சொன்னேன். இதற்கு பதிலடி கொடுத்த ஜோவிகா, “எல்லோரும் வந்து படிச்சி பெரிய ஆளா ஆக வேண்டும் என்பது இல்லை. படிப்புங்கிற விஷயத்துல நிறைய குழந்தைகள் தப்பான இதுல போகுது. என்னை முன்னிலைப்படுத்தி தான் நான் இங்க வந்துருக்கேன்” என ஆக்ரோஷமாக சொல்கிறார். உடனே விசித்ரா நீ பேசுறது பேச்சு சுதந்திரம் இல்லை என கூற, நான் தப்பா ஏதாவது சொன்னேனா என சக போட்டியாளர்களிடம் கேட்க, அவர்களை இல்லை என தலையசைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.