Maaveeran First Single Lyrics: அண்ணாண்ட்ட அண்ணாண்ட்ட வங்ககரை.. சென்னை தர லோக்கலில் சீன் - ஆஹ் சாங்.. முழு லிரிக்ஸ் இதோ!

சிவகார்த்திகேயன் இன்று (பிப்.17) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் மாவீரன் படக்குழு சீன் - அஹ் சீன் - அஹ் முதல் சிங்கிள் பாடலை வெளியிட்டது. 

Continues below advertisement

சிவகார்த்திகேயன் இன்று (பிப்.17) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் மாவீரன் படக்குழு சீன் - அஹ் சீன் - அஹ் முதல் சிங்கிள் பாடலை வெளியிட்டது. 

Continues below advertisement

மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள்:

மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலைக் கேட்க இங்க க்ளிக் செய்யுங்க...

இந்தநிலையில், அந்த பாடலின் லிரிக்ஸ்களை முழுமையாக கீழே தெரிந்துகொள்ளுங்கள்...

வானாகி மண்ணாகி ஊனாகி உயிராகியிருக்கோம்.

உன்னை நம்பி வந்துட்டோம்.. நீ காத்திடணும்ம்ம்ம்ம்...

எங்கள சேர்ந்திடணும்ம்ம்ம்... வந்து ஆடிடணும்... ஆடிடணும்... 
ஆடிடணும்... ஆடிடணும்... டேய்ய்ய்ய்ய்... 

சீன் - அஹ் சீன் - அஹ்.. ஆனோமே சீன் - அஹ்..

தோனா... தோனா.. நமக்குன்னு ஒரு வழி பிறக்குது தானா..

வானா.. வானா.. வைஃப் ஆவோம் வானா.. 

கானா.. கானா.. பறையடிச்சுங்க பொறக்குது புது கானா.. 

காலம் வந்தாச்சு.. கை மேல தந்தாச்சு..

கூர கொட்டாவோம்.. கோல்டு கூடாரம் ஆயாச்சு..

ஏய் சீன்னு சில்லாக்கு.. இங்க சந்தோஷம் ஃபுல்லாக்கு..

தக்க தாளம் தல்லாக்கு.. தாரை தப்பட்டை தர டோலாக்கு.. 

அண்ணாண்ட்ட அண்ணாண்ட்ட வங்ககரை.. இண்ணாண்ட்ட இண்ணாண்ட்ட நம்ம பேலஸூ.. 

ஒன்னோடு ஒன்னாக வாழும்வரை.. எந்நாளும் கொண்டாடு கொளுத்து பட்டாச.. 

அண்ணாண்ட்ட அண்ணாண்ட்ட வங்ககரை.. இண்ணாண்ட்ட இண்ணாண்ட்ட நம்ம பேலஸூ.. 

ஒன்னோடு ஒன்னாக வாழும்வரை.. எந்நாளும் கொண்டாடு கொளுத்து பட்டாச.. 

சீன் - அஹ் சீன் - அஹ்.. ஆனோமே சீன் - அஹ்..

தோனா... தோனா.. நமக்குன்னு ஒரு வழி பிறக்குது தானா.. 

பத்து மாடி மேல பாரு ஊஞ்சலு.. எங்க பக்கத்துல பறக்குதுமா ஏஞ்சலு.. அப்போ காலி குடம் காத்திருக்கும் கூட்டமா.. இப்ப வாட்டர் டேங்கு நிக்குதமா வாட்ட சாட்டமா.. 

தாத்தன் தகப்பனும் தலைமுறையா.. வாழ்ந்தோம் வழி வழியா..!

வாழ்ந்த ஜனமெல்லாம் குடி புகுந்தோம்.. ஊர மறந்துட்டு முதல் முறையா..!

வானா.. வானா.. வெயிட்டா வானா.. வேணா.. வேணா.. ஹேட்டே வேணா.. 

Maaveeran First Single: சீனா... சீனா... சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் வெளியான மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்!

அட ஏன்மா இன்னா மா.. இங்க எல்லாரும் ஒன்னம்மா.. அத ஜோரா நீ சொல்லமா.. போடு நீ போடு டுமாளம்.. ஜெகஜாலம்மா.. 

அண்ணாண்ட்ட அண்ணாண்ட்ட வங்ககரை.. இண்ணாண்ட்ட இண்ணாண்ட்ட நம்ம பேலஸூ.. 

ஒன்னோடு ஒன்னாக வாழும்வரை.. எந்நாளும் கொண்டாடு கொளுத்து பட்டாச.. 

அண்ணாண்ட்ட அண்ணாண்ட்ட வங்ககரை.. இண்ணாண்ட்ட இண்ணாண்ட்ட நம்ம பேலஸூ.. 

ஒன்னோடு ஒன்னாக வாழும்வரை.. எந்நாளும் கொண்டாடு கொளுத்து பட்டாச.. 

கொளுத்தி போடு டப்பாச.. ஏய் கொளுத்தி போடு டப்பாச.. கொளுத்தி போடு டப்பாச.. கொளுத்தி போடு டப்பாச.. கொளுத்தி போடு டப்பாச..கொளுத்தி போடு டப்பாச.. 

ஏய் கொளுத்தி கொளுத்தி கொளுத்தி போட டப்பாச.. கொளுத்தி போடு.. கொளுத்தி போடு.. கொளுத்தி போடு டப்பா டப்பா டப்பாச.. 

சிவகார்த்திகேயன், மண்டேலா படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குநர் மடோன் அஸ்வின் உடன் இணைந்துள்ள படம் ’மாவீரன்’. ப்ரின்ஸ் படத் தோல்விக்குப் பிறகு இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் நிலையில், இந்தக் கூட்டணி கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிதி சங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார். மண்டேலா படத்துக்கு இசையமைத்து கவனமீர்த்திருந்த இசையமைப்பாளர் பரத் சங்கர் மாவீரன் படத்துக்கும் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி இந்தப் படத்தின் ’சீன் - அஹ் சீன் - அஹ்’எனும் முதல் இன்று பாடல் ரிலீசாகியுள்ளது.  இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் கபிலன் மற்றும் சிஎம். லோகேஷ் இணைந்து எழுதியுள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola