திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை கடந்த 12ஆம் தேதி அதிகாலை 1.19 மணியளவில் தேனீமலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் துவங்கி அதன் பிறகு மாரியம்மன் கோவில் தெரு உள்பட 10 தெருவில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்துக்கொண்டு, கலசப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்தனர். இதையடுத்து, அதிகாலை 4:20 மணியளவில் போளூரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில்  2 மணி நேரத்தில் 40 கிலோமீட்டர் தொலைவில் நான்கு ஏடிஎம் மையங்களை கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி எடுத்து   கொள்ளையடித்தனர்.


இந்த கொள்ளையை அரங்கேற்றிய அரியானா பகுதியைச் சேர்ந்த கும்பல் கர்நாடக மாநிலம் கேஜிஎப் பகுதியில் தங்கி ஹாரிப் ஜாவித் உதவியுடன் திருவண்ணாமலையில் கொள்ளையடித்து விட்டு மீண்டும் கேஜி எஃப் பகுதிக்கு சென்று ஒரு நாள் தங்கி விட்டு மறுநாள் ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பல் குஜராத் மாநிலம் வாதோரா பகுதிக்கு தப்பி உள்ளனர். இவர்களை வேலூர் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கர்நாடகா மாநிலம் கேஜிஎப் பகுதியில் தாஜ் என்ற ஒரு தனியார் ஹோட்டலில் மேல் மாடியில் கொள்ளை கும்பலை  ஹோட்டல் உரிமையாளருக்கு தெரியாமல் அங்குள்ள ஊழியர்கள் உதவியுடன் தங்கி உள்ளனர். இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் கேஜிஎப் பகுதியில் கொள்ளையர்களுக்கு உதவிய இரண்டு நபர்களை  திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர்  பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகள் கூகுள் மேப் உதவியுடன் non டோல்கேட் என்ற பாதையை பயன்படுத்தி திருவண்ணாமலை முதல் கர்நாடகா மாநிலம் கே ஜி எஃப் வரை சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.




திருவண்ணாமலையில் உள்ள தேனிமலை பகுதியில் ரூ.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் மையத்தில் கைரேகைகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கேஜிஎப் பகுதியில் குற்றவாளிகள் தங்க வைக்கப்பட்ட இடத்தின் சிசிடிவி காட்சிகள் ஆதாரங்களும் தேவையான அளவிற்கு  காவல்துறைக்கு கிடைத்துள்ளது. ஓரிரு நாட்களில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை திருவண்ணாமலை மாவட்ட தனி படை காவல்துறையினர் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஹாரிப்பிற்கும் ஹரியானா மாநிலம் நியூஜ் பகுதியைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு மத்திய பிரதேஷ் மாநிலத்தில் கார் ஒன்றை திருடிய வழக்கில் கைது செய்து சிறையில் இருந்துள்ளார். தற்போது ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலுக்கும் ஹரிப்பிற்கும் இடையே அப்போது நட்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.