Maamannan Audio Launch: டிவியில் ஒளிபரப்பாகும் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போது தெரியுமா?

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். கடைசியாக கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நடித்துக் கொண்டிருக்கும்போதே உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும், தனது கடைசிப்படம் ‘மாமன்னன்’ என்றும் தெரிவித்தார். 

பெரும் எதிர்பார்ப்பில் மாமன்னன்

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்போடு உருவாகியுள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா  கடந்த ஜூன் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.

உதயநிதி ஸ்டாலினின் கடைசிப்படம் என்பதால் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன்,  இயக்குநர்கள் வெற்றிமாறன், கே.எஸ்.ரவிக்குமார், மிஸ்கின், விஜய் ஆண்டனி, தியாகராஜா குமாரராஜா, ஏ.எல்.விஜய், ரவிகுமார், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் நடிகர்கள் கவின், சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. 

இப்படியான நிலையில் மாமன்னன் படம் ஜூன் 29 ஆம் தேதி திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனிடையே மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜூன் 18 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு சன் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும்” என தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மேலும் படிக்க: Udhayanidhi Stalin Speech: ‘எனக்கு எண்டே கிடையாது; திரும்பவும் நடிக்க வரலாம்’ ... இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்

Continues below advertisement
Sponsored Links by Taboola