லியோ


விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இன்று காலை 9 மணி முதல் முதல் காட்சி தொடங்கியுள்ளது. திரையரங்க உரிமையாளர்களுக்கு விநியோகஸ்தர்களுக்கும் இடையில் நீடித்த பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் மொத்தம் 900 திரையரங்கத்தில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. தற்போது லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுடம் படத்தை பார்க்க திரையரங்கத்திற்கு சென்றுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


வெற்றி திரையரங்கம்


பொதுவாகவே  படக்குழுவினர் ரசிகர்களுடன் படங்களை பார்க்க ரோகிணி திரையரங்கத்திற்கு செல்வது வழக்கம். சமீபத்தில் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின்போது அதிகப்படியான கூட்ட நெரிசல் காரணமாக திரையரங்கத்தின் சீட்டுகள் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து லியோ திரைப்படம் ரோகிணி திரையரங்கத்தில் திரையிடப்படாது என்று அறிவித்தது. இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்தார்கள்.


நேற்று சென்னையில் லியோ படத்திற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தான் வெற்றி திரையரங்கத்தில் படத்தை பார்க்க இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது இன்று வெற்றி திரையரங்கத்தில் லோகேஷ் கனகராஜ், அனிருத், மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியவர் லியோ திரைப்படத்தை பார்க்க வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் அவரைப் பார்த்ததும் உற்சாகத்தில் கூச்சலிட்டார்கள். 






லியோ முதல் பாதி


லியோ திரைப்படத்தின் முதல் பாதி முடிந்துள்ள நிலையில் முதல் பாதிக்கான விமர்சனங்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. மேலும் வெளி நாடுகளில் லியோ படத்தை பார்த்தவர்கள் படம் பற்றிய நல்ல விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். லியோ படத்தை பார்த்த பின் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கிறார்.


லியோ நடிகர்கள்


விஜய், த்ரிஷா, கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜூன் , சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அனுராக் கஷ்யப், மேத்யூ தாமஸ் உள்ளிட்டவர்கள் லியோ படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்து 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைதி லோகேஷ் கனகராஜ் இணைந்து இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளனர். விஷ்ணு எடவன் பாடல்களை எழுதியுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார்.




மேலும் படிக்க : 'லியோ' இருக்கட்டும்... இதுவரையில் விஜய் நடித்த படங்களின் டாப் 10 படங்கள் என்னென்ன தெரியுமா?


LEO Release: கேரளாவில் பிரமாண்டமாக வெளியான லியோ! படம் பார்த்த ரசிகர்களின் ரியாக்‌ஷனை பாருங்க..