நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ(LEO) திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது. தமிழ்நாட்டை தவிர, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் காலை 4 மணிக்கே படம் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
கேரளாவில் கடந்த அக்டோபர் 15ம் தேதி ரிசர்வேஷன் வெளியான நிலையில், அதிக பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனிங்ஸ் பெற்ற திரைப்படங்களில் நம்பர் 1 இடத்தை பிடித்தது லியோ திரைப்படம்.
முன்னதாக, கேஜிஎஃப் 2 செய்த வசூல் சாதனையை ஏற்கனவே லியோ முறியடித்ததாக கூறப்பட்டது. மேலும், கேரளாவில் இதுவரை இல்லாத வசூல் சாதனையை லியோ படைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கேரளாவில் படம் வெளியானது முதல் அம்மாநில சினிமா மற்றும் விஜய் ரசிகர்கள் படத்தை பெரியளவில் கொண்டாடி வருகின்றனர்.
விஜய்க்கு இந்த லியோ படம் புதிய மைல்கல்லை கொடுக்கும் என்றும், லோகேஷ் கனகராஜ் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்றும் கூறிவருகின்றனர்..
கேரளா ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு என்ன சொன்னார்கள்..?
ரசிகர் 1: லியோ திரைப்படம் நிச்சயம் 1000 கோடியை வசூல் செய்யும். சூப்பரா நடித்திருக்கிறார் விஜய், லோகேஷ் கனகராஜ் சூப்பரா டைரக்ட் பண்ணியிருக்காரு. ஸ்கீரின் ப்ளே சூப்பரா இருக்கு, குடும்பத்தோட எல்லாரும் வந்து பார்க்கலாம்.
ரசிகர் 2: ரொம்ப நல்லா இருக்கு படம். படத்தோட தொடக்கத்துல ஹைனாவோட ஃபைட் சீன் வேற மாதிரி இருக்கு. அனிருத் மியூசிக் பயங்கரமா இருக்கு. க்ளைமேக்ஸ் சண்டகாட்சி ரொம்ப நல்லா இருந்துச்சு. தளபதி விஜய் மாஸ்தான்.
ரசிகர் 3: படம் நல்லா இருந்தது, அடிப்பொலியா இருந்தது. இண்டர்வெல் சீன் ரொம்ப த்ரில்லா இருந்துச்சு.
ரசிகர் 4: க்ளைமேக்ஸ் ட்விட்ஸ் சூப்பர், ஒன் மேன் ஆர்மியா விஜய் கலக்கி இருக்காரு. எல்லாதையும் இங்க சொல்லி ஸ்பாய்லர் பண்ண விரும்பல. படத்தை நேர்ல வந்து பார்த்து என்ஞாய் பண்ணுங்க.
ரசிகர் 5: ஐயோ! லியோ சூப்பரா இருக்கு ப்ரோ. சும்மாவா படம் எடுத்து வச்சுருக்காங்க சூப்பரா இருக்கு.
ALSO Read | LEO Twitter Review: “விஜய் - லோகேஷ் கனகராஜின் தரமான சம்பவம்” .. லியோ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!