ஒட்டுமொத்த தமிழ்நாடே இளைய தளபதி விஜய்யின் 'லியோ’ பாக்க ஆவலுடன் காத்து கொண்டு இருந்தும் இந்த நேரத்தில் அவர் நடிப்பில் வெளியான டாப் 10 படங்களின் லிஸ்ட் பற்றி தெரிஞ்சுக்கலாமா...
பிகில்:
அட்லீ இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான பிகில் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இது வரையில் அவர் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிகப்படியாக 304 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.
வாரிசு :
2023ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் 'துணிவு' படத்துடன் போட்டியிட்டு வெளியான இப்படமும் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக விஜய் கேரியரை அலங்கரித்தது. கிட்டத்தட்ட 303 கோடி வசூல் செய்த இப்படத்தின் பட்ஜெட் 180 கோடி என கூறப்படுகிறது. படம் வெளியாவதற்கு முன்னரே சுமார் 140 கோடியை ஈட்டியுள்ளது 'வாரிசு' திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மெர்சல் :
2017ம் ஆண்டு விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால் நடிப்பில் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் 257 கோடி ரூபாயை வசூல் செய்தது.
சர்கார் :
2018ம் ஆண்டு விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியாவதற்கு முன்னரே 135 கோடி வரை வசூலித்தது. உலகளவில் 253 கோடி வசூல் செய்தது.
மாஸ்டர் :
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கூட்டணி சேர்ந்த மாஸ்டர் திரைப்படம் 2021ம் ஆண்டு வெளியானது. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது. உலகளவில் 243 கோடி வசூல் செய்தது.
பீஸ்ட்:
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான இப்படம் உலகளவில் 235 கோடி வசூல் செய்தது.
தெறி:
அட்லீ - விஜய் கூட்டணியில் உருவான இப்படத்தில் ராதிகா சரத்குமார், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா நடித்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 75 கோடி பட்ஜெட்டில் உருவாகி 153 கோடியை வசூலித்தது.
துப்பாக்கி :
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்த இந்த கதைக்களம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. 70 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 127 கோடி வசூல் செய்தது.
கத்தி :
விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2014ம் வெளியான 'கத்தி' திரைப்படம் 65 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 126 கோடியை வசூல் செய்தது.
பைரவா :
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான பைரவா திரைப்படம் 112 கோடி வசூல் செய்தது.
இந்த டாப் 10 வரிசையில் இடம் பெற்று இருக்கும் மற்ற விஜய் படங்களின் முந்தைய வசூல் விகிதத்தை எல்லாம் துவம்சம் செய்து 'லியோ' திரைப்படம் அதிகமாக வசூல் செய்து பட்டையை கிளப்பும் என்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ALSO Read | LEO Twitter Review: “விஜய் - லோகேஷ் கனகராஜின் தரமான சம்பவம்” .. லியோ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!