நடிகர் பிரகாஷ் ராஜ் தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.  “விஜய் அரசியலுக்கு வரட்டும், இப்போ மு.க.ஸ்டாலின் இருக்கார். திருமாவளவன் இருக்கார். நிறைய பேர் இருக்காங்க. இப்போ ரஜினி சார் வந்தாரு வேண்டாம்னாரு, கமல் சார் இப்போ பேசிக்கிட்டு இருக்காரு. ஆகையால் மக்கள் முடிவு செய்வார்கள்.


அவங்க முதலில் சொல்லட்டுமே. கல்வி முறை பற்றி என்ன சொல்லப் போறீங்க, விவசாயம் பற்றி என்ன சொல்ல போறீங்க, பள்ளிக்கூடங்கள் குறித்து என்ன சொல்ல போறீங்க. அவரு இன்னும் சொல்லல இல்ல? இப்போ ட்ரெய்லர் தான் வந்து இருக்கு. படம் இன்னும் வர்ல. படம் பார்க்கும் போது நாம முடிவு பண்ணுவோம்.


அப்போ நீங்க உண்மையா, பொய்யானு பல கேள்விகள் கேட்போம். வரவேற்கணும், நல்லது செய்யுறவங்க யார் வந்தாலும் நமக்கு ஓ.கே. அவரு வறேன்னா வாங்கனு தான் சொல்ல முடியும். வந்த பிறகு எதுக்கு வந்திங்க சொல்லுங்க சார்? அப்டினு நம்ம கேட்போம். அந்த ஒரு உரிமை நம்ம கிட்ட தான் இருக்கனும்” என பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.


விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் செய்து வருகிறார். அவரது மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருவதால், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.


விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி கண்டனர். தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக தேர்வு செய்து அவர்களுக்கு கல்வி உதவித்தொகை சான்றிதழ் உள்ளிட்டவற்றை விஜய் வழங்கினார். 


நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில் நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது  அணியினர் மத்தியில் உரையாற்றிய புஸ்ஸி ஆனந்த், “விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களது சமூக வலைதள கணக்குகளில் தரம் தாழ்ந்து ஆபாசமாக பதிவிடக்கூடாது. நீங்கள் அளிக்கும் பதில்கள் கருத்தியலாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மொழி, இனம், சாதி மத வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க


எஸ்.ஐ. வேலைக்கான தேர்வில் காப்பி அடித்து சிக்கிய போலீசின் மனைவி..! என்னம்மா இப்டி பண்றீங்களேமா..?


A R Rahman - Madhavan: ஓப்பன்ஹெய்மரை விட உங்க படம் தான் பிடிச்சிருந்தது... மாதவனை பாராட்டித் தள்ளிய ஏ.ஆர்.ரஹ்மான்!