தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்த தேர்வு நடைபெறுகிறது. 621 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்கள் இந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு போலீசில் உதவி ஆய்வாளர் பணிக்கு கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியானது. அதில் காவல் சார்நிலை பணிக்கு 511 காலி இடங்களும், சிறப்பு காவல் சார்நிலை பணிக்கு 110 பணி இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எஸ்.ஐ. வேலை:


இத்தேர்வுக்கு, ஜூன் 1 முதல், ஜூன் 30 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பம் வரவேற்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள், 20 நிரம்பியவராகவும், 30 வயது மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மற்றும் இன்று தேர்வு நடைபெறுகிறது. முதன்மைத் எழுத்து தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.


மதியம் பிற்பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது. தமிழ் மொழி தகுதி தேர்வு மதியம் நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று (சனிக்கிழமை) காவல்துறையில் பணியாற்றுவோரை தவிர மற்றவர்களுக்கு நடைபெறுகிறது. இதில் ஆண்கள் 5200, பெண்கள் 1776 என மொத்தமாக 6976 பேர் தேர்வு எழுதுகின்றனர்.


 




 


இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை ஆய்வாளர் பணிக்கு 6 இடங்களில் மையம் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் பெண்களுக்கு தனியார் மகளிர் கல்லூரியில் பெண் தேர்வாளர்களுக்கு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு மையத்தில் லாவண்யா என்ற பெண் தேர்வு எழுதினார். அப்பொழுது லாவண்யா கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.


விடைக்கான பிட்டு:


தேர்வின் விதிமுறைப்படி யாரையும் கழிவறைக்கு செல்ல அனுமதிக்க கூடாது ஆனால் அந்த பெண் கர்ப்பமாக இருந்ததால் அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் 2 பெண் காவலரை உடன் அனுப்பி சிறிது நேரம் கழித்து தேர்வு அறைக்குள் வந்த தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண் காப்பியடித்து எழுதியதாகவும் அவர் வைத்து இருந்த பிட்டு பேப்பர் எழுதவுள்ள கேள்வி தாள்களுடைய சரியான விடை என கூறப்படுகிறது.


அப்போது தேர்வு அறை கண்காணிப்பு பணியாளர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது போலீசாரிடம் அந்தப் பெண் சிக்கி உள்ளார். இதனை அடுத்து போலீசார் அந்த பெண்ணை தேர்வாளரை தேர்வு எழுத அனுமதிக்காமல் தேர்வு மைய கண்காணிப்பு அலுவலகம் ஒப்படைத்துள்ளார். இதை அடுத்து தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பெண் தேர்வாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு மையத்துக்குள் தேர்வாளர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அத்தகைய கடும் பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த பெண் தேர்வாளர் மையத்துக்குள் பிட்டு பேப்பர் எப்படி எடுத்து சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் விசாரிக்க போன் செய்த போது அவர் போன் எடுக்கவில்லை,


 




 


 


போலீசின் மனைவி:


மேலும் இது குறித்து மாவட்ட சிறப்பு தேர்வு கண்காணிப்பாளர் அலுவலரான பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி சத்திய பிரியா விசாரணை நடத்தி வருகிறார். சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பணிக்கான தேர்வு நடைபெறும் மையத்தில் அதிகாரிகள் உடந்தையோடு இந்த முறைகேடு நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு எழுதிய மாணவியின் கணவர் திருவண்ணாமலையில் மாவட்டத்தில் இதற்கு முன்பு போலீஸ் உதவி ஆய்வாளராக பணியாற்றியவரும், தற்போது சென்னையில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவருடைய உறவினர் ஒருவர் திருவண்ணாமலையில் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடத்தக்கது.