LEO Trailer: வரும் 5ம் தேதி வெளியாக இருக்கும் விஜய் நடிக்கும் லியோ படத்தின் டிரெய்லர் சன் டிவி யூட்யூப் சேனலில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் வரும் 19ம் தேதி உலகெங்கும் திரைக்கு வருகிறது. ஏற்கெனவே லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் வெற்றிப்பெற்றிருந்தது. அதை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ், விஜய் இணைந்துள்ளதால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையே லியோ படத்தில்  த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


ஏற்கெனவே லியோவின் நான் ரெடி தான் பாடல் வெளியாகி டிரெண்டானது. விஜய், அர்ஜூன், சஜ்சய் தத் என ஒவ்வொரு நடிகரின் கிளிம்ப்ஸ் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதற்கிடையே கடைந்த மாதம் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சி நடைபெறாது தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


எனினும், லியோ படத்தின் இரண்டாவது லிரிக்ஸ் பாடல் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த வாரம் 'படாஸ்' (Badass) லிரிக் வீடியோ வெளியானது. பாடல் வரிகள் விஜய் கதாபாத்திரம் குறித்து விவரிப்பது போல் அமைந்திருந்தது. மேலும், விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள வில்லன் சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோரும் பாடலில் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் லியோ படத்தின் டிரெய்லர் வரும் 5ம் தேதி வெளியாகும் என்றும், அதுவும் சன் டிவியின் யூடியூப் சேனலில் ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 






மேலும் படிக்க:  AR Rahman Notice: புகழுக்கு களங்கம் விளைவிப்பதா? - ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ஏ.ஆர். ரஹ்மான்!