லியோ வெற்றி விழாவில் நடிகை த்ரிஷா கலந்துகொண்டு பேசியது கவனமீர்த்துள்ளது. லியோ படத்தில் நீண்ட காலத்துக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ஐந்தாம் முறையாக த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ளார்.


லைக்ஸ் அள்ளிய விஜய் - த்ரிஷா ஜோடி


பார்த்தி மற்றும் லியோ கதாபாத்திரங்களில் விஜய் நடித்த நிலையில், சத்யா எனும் கதாபாத்திரத்தில் அவருக்கு மனைவியாக த்ரிஷா நடித்திருந்தார். நீண்ட காலத்துக்குப் பிறகு இந்த ஜோடி திரையில் இணைந்தது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.


இந்நிலையில், லியோ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அவற்றை எல்லாம் தாண்டி நல்ல வசூலைக் குவித்து வருகிறது. 13 நாள்களை திரையரங்குகளில் கடந்துள்ள லியோ, ரூ.540 கோடிகளுக்கும் மேல் வசூலைக் குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இந்நிலையில் இன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ வெற்றிவிழா கொண்டாட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொண்ட த்ரிஷா பேசியதாவது:


ஸ்கூல்ல ஒன்னா படிச்ச நண்பர்


"எல்லாருக்கும் நன்றி. லியோ ஷூட்டிங் எனக்கு ஒரு வகேஷன் மாதிரி. லோகேஷ் ரொம்ப நல்ல மனுஷன்.. என்ன கொல்லல. ஸ்கூல்ல ஒன்னா படிச்ச நண்பரை ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணும்போது எப்படி இருக்குமோ அப்படிதான் லியோல விஜய்யை பார்க்கும்போது எனக்கு இருந்துச்சு.


அதே கம்ஃபர்ட், அதே அன்பு, அதே மரியாதை.. எனக்கு சிறப்பான கோ ஸ்டாரா இருப்பதுக்கும் நல்ல ஃப்ரெண்டா இருப்பதுக்கும் நன்றி. ஒரு கோ ஸ்டாரோட எனக்கு மிக நீண்ட பயணம் இருந்துச்சுனா அது விஜய்யோட தான். வீடு ஒரு இடமில்ல.. அதுவும் ஒரு ஆள்னு விஜய் சொல்லுவாரு. எனக்கு லியோ செட் அப்படி தான் இருந்துச்சு.


காரப்பொறி வாங்கி தரல..


விஜய் எனக்கு இன்னும் காரப்பொரி வாங்கி தரல. இன்னொரு படம் பண்ணாலாமா?" எனப் பேசினார்.


மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் வெற்றி விழாவில்  இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய், த்ரிஷா, அர்ஜூன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான்,  காமெடி நடிகர் நெப்போலியன், சாண்டி மாஸ்டர், மடோனா செபஸ்டியன், மிஷ்கின் என பல நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர்.  இந்த விழா கூடிய விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: LEO Success Meet LIVE: லியோ படத்தின் வெற்றி விழா.. விஜய்யை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் மிஷ்கின்..!


LEO Success Meet: லியோ வெற்றி விழா.. கெத்தாக வந்த விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ்.. வைரல் வீடியோ இதோ..!