லியோ படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை விஜய் சந்திக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


அன்பில் நனைத்த டோலிவுட் ரசிகர்கள்


லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் விஜய் இரண்டாம் முறையாக கூட்டணி வைத்துள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இப்பபடத்தின் முதல் சிங்கிளான ‘நா ரெடி’ பாடல் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி வெளியாகி வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில் லியோ பட் கெட் அப்பில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் தன் ரசிகர்களை சந்திக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், தலகோனாவில் தற்போது லியோ ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், அங்கு ரசிகர்களை விஜய் சந்திக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


முன்னதாக லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் ஷூட்டிங் தளத்தில் தன் ரசிகர்களை சந்திக்கும் வீடியோக்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.


 






முன்னதாக டோலிவுட் ரசிகர்களைக் குறிவைத்து விஜய்யின் வாரிசு படம் தெலுங்கிலும் வெளியானது. இந்நிலையில் டோலிவுட் ரசிகர்கள் விஜய்யை சந்திக்க படையெடுக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது விஜய்யின் கோலிவுட் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.


 






சர்ச்சையில் சிக்கிய நா ரெடி பாடல்


நா ரெடி பாடல் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியான நிலையில், தினேஷ் மாஸ்டர் இப்பாடலுக்கு கொரியோகிராஃப் செய்திருந்தார். விஜய்யுடன் இணைந்து இரண்டாயிரம் பேர் இப்பாடலில் நடனமாடியுள்ளனர்.  


நா ரெடி பாடல் வெளியாகி ஒருபுறம் லைக்ஸ் அள்ளினாலும், மறுபுறம் இப்பாடல் கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.


பாடல் முழுவதும் விஜய் சிகரெட் உடன் நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், பாமக் தலைவர் அன்புமணி தொடங்கி, நெட்டிசன்கள் வரை இப்பாடல் விமர்சனங்களையும் பெற்றது.


மேலும் விஜய் லியோ படத்தில் இரட்டை வேடங்களில் விஜய் நடித்து வருவதாவும், தாஸ் எனும் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. 


மேலும் படிக்க: Udhayanidhi Stalin: 'நமக்கு நடிக்கவே வராது. அதுக்கே பெரிய பாடா இருக்கும்; இதுல இது வேறயா?’ - உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு!