புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் இன்று உலகக் கோப்பை 2023ன் 17வது போட்டியில் இந்தியாவும், வங்கதேச அணியும் மோத இருக்கின்றன.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தனது 4வது போட்டியில் களமிறங்குகிறது. அதேபோல், வங்கதேச அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியுடனும், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியுடனும் களமிறங்குகிறது.
இதுவரை இரு அணிகளும் நேருக்குநேர்:
வங்கதேசம் மற்றும் இந்தியாவும் இதுவரை 40 ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. அதில், இந்தியா அதிகபட்சமாக 31 போட்டிகளிலும், வங்கதேசம் 8 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.
விளையாடிய மொத்த ஆட்டங்கள் : 40
இந்தியா வென்றது: 31
வெற்றி வங்கதேசம் : 8
ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவும், வங்கதேசமும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இந்திய அணி 3 முறையும், வங்கதேசம் 1 முறையும் வெற்றிபெற்றுள்ளன.
தேதி |
வெற்றி |
வித்தியாசம் |
இடம் |
2 ஜூலை 2019 |
இந்தியா |
28 ரன்கள் |
எட்ஜ்பாஸ்டன் |
19 மார்ச் 2015 |
இந்தியா |
109 ரன்கள் |
மெல்போர்ன் |
19 பிப்ரவரி 2011 |
இந்தியா |
87 ரன்கள் |
டாக்கா |
17 மார்ச் 2007 |
வங்கதேசம் |
5 விக்கெட்டுகள் |
போர்ட் ஆஃப் ஸ்பெயின் |
உலகக் கோப்பை 2023: இந்தியா vs வங்கதேசம் சாத்தியமான பிளேயிங் லெவன்:
இந்தியா: சுப்மன் கில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா
வங்கதேசம் : தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், நஜ்ம் மிராஸ் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான்.
இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்பு:
வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்தில் களம் இறங்குகிறது. அதே சமயம், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு வர வாய்ப்புள்ளது. தற்போது இந்திய அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 4 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
வங்காளதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது, ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக 137 ரன்கள் வித்தியாசத்திலும், 8 விக்கெட் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணியுடன் தோல்வியடைந்தது.
புனேயில் இன்று மழை பெய்யுமா?
இந்தியா-வங்கதேசம் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்படுமா? இந்தியா - பங்களாதேஷ் போட்டி நடைபெறும் நாளில் மழை பெய்யுமா?
புனேவில் இன்று மழை பெய்யாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியா-வங்கதேசம் இடையேயான போட்டி நடைபெறும் நாளில் புனேயில் சூரிய ஒளி இருக்கும். மணிக்கு 2-10 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். ஆனால் மழைக்கு வாய்ப்பு இல்லை. இந்தியா-வங்கதேசம் இடையேயான போட்டி நடைபெறும் நாளில் மழை பெய்ய வாய்ப்பில்லை.