LEO Movie Twitter Review: நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் இன்று வெளியாகியுள்ளது. முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதனைப் பற்றி காணலாம்.


விக்ரம் படத்துக்குப் பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் “லியோ”(LEO).





இந்த படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். மாஸ்டர் படத்துக்குப் பின் இருவரும் கூட்டணி சேர்ந்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்திற்கு நிலவியது. லியோ படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.





மேலும் இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மடோனா செபாஸ்டியன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், பிரியா ஆனந்த், பாபு ஆண்டனி, மேத்யூ தாமஸ், அனுராக் காஷ்யப், அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.






தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள லியோ படம் இன்று உலகமெங்கும் தியேட்டரில் வெளியானது. இப்படத்திற்கு தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிட அனுமதி கிடைத்துள்ளது.





அதேசமயம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இதனால் மாநில எல்லைகளில் உள்ள ரசிகர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு படையெடுத்து சென்றனர். 






தியேட்டர் வளாகங்கள் முழுக்க பேனர்கள், கட் அவுட்கள், போஸ்டர்கள், தோரணங்கள் என விஜய் ரசிகர்கள் அமர்களப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்ட நிலையில், டிக்கெட்டுகள் வெளியில் பல மடங்கு கட்டணம் வைத்து விற்பனை செய்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இப்படியான நிலையில் லியோ படம் வெளியாவதை முன்னிட்டு தியேட்டர்களில் விடிய விடிய கொண்டாட்டங்கள் களைகட்டியது. 






இதனைத் தொடர்ந்து முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகர்கள் தங்களுடைய  கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பதிவை பார்க்கும் லியோ படம் எல்.சி.யு எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இடம் பெற்றுள்ளது தெளிவாகியுள்ளது. ரசிகர்கள் விமர்சனங்களில் சில இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.