திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில், சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 

ரேஸில் முந்துவார்களா அசோக் கெலாட், சச்சின் பைலட்? வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் - பரபரக்கும் ராஜஸ்தான்

பழனியாண்டவர் கோயில் காணிக்கை:

இதற்கு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமை தாங்கினார். காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், பழனி பகுதி வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என பலரும் ஈடுபட்டனர்.

முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 51 ஆயிரத்து 581-ம், தங்கம் 657 கிராம், வெள்ளி 9 கிலோ (9,217 கிராம்), வெளிநாட்டு கரன்சி 406-ம் கிடைத்தது. நேற்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

Omni Buses: அதிக கட்டணம் வசூலித்த 102 ஆம்னி பேருந்துகள்.. போக்குவரத்து துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

இதில் ரூ.56 லட்சத்து 61 ஆயிரத்து 505 வருவாயாக கிடைத்தது. தங்கம் 158 கிராம், வெள்ளி 19 கிலோ 85 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 83-ம் கிடைத்தன. இதன்மூலம் கடந்த 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.2 கோடியே 57 லட்சத்து 13 ஆயிரத்து 86 வருவாயாக கிடைத்தது. தங்கம் 815 கிராம், வெள்ளி 28 கிலோ 302 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 489-ம் கிடைத்திருந்தது.

Madonna Sebastian Photos : லியோவின் தங்கச்சி எலிசா..ரசிகர்களுக்கு சர்பரைஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!