LEO Censor Update: விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது. 



லியோ படம் அறிவிக்கபட்டத்தில் இருந்து அதன் ஒவ்வொரு அப்டேட்களையும் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் பின்னணி இசை அமைத்துள்ளார். லியோ படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து படப்பிடிப்பின் பூஜை,  டைட்டில் ரிவீல் வீடியோ, காஷ்மீர் ஷூட்டிங், விஜய் பயணம், நான் ரெடி தான் பாடல், கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்கள் என ஒவ்வொன்றும் இணையத்தில் டிரெண்டானது. 


இதை தொடர்ந்து லியோ ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடைபெறும் என்றும், அதில் விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்கலாம் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணம் காட்டி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாததால் ஏமாற்றமடைந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக லியோ படத்தின் பேடாஸ் சிங்கிள் பாடல் வெளியாகி டிரெண்டானது. அனிருத் பாடியை இந்த பாடலின் விஜய்யின் கேரக்டர் ரிவீல் செய்யப்பட்டது.  


இதற்கிடையே லியோ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என்றும், அதுவும் சன் டிவி யூடியூப் சேனலில் வெளியிடப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. படத்தின் டிரெய்லரை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், லியோ படத்தின் மற்றொரு அப்டேட்டை அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். லியோ படத்துக்கு யு/ஏ சான்றிதழை சென்சார் போடு வழங்கியுள்ளது. இதன் மூலம் லியோ படம் கமர்ஷியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே லியோ படத்தின் பாடல் வரிகள் கொண்ட வீடியோ காட்சிகள் வன்முறையை கூறி இருந்தாலும், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 






மேலும் படிக்க: Silambarasan: “உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்”.. சித்தார்த்தை நெகிழ்ந்து பாராட்டிய சிம்பு..!


நாளை வெளியாகும் ‘லியோ’ டிரைலர்.... தியேட்டரை புக் செய்த விஜய் ரசிகர்கள்...கரூரில் தொடங்கிய கொண்டாட்டம்