சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்கள் விமர்சகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் சித்தா படத்தை பாராட்டி பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


 


சித்தா


பண்ணையாரும் பத்மினியும் ,சேதுபதி, சிந்துபாத் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சு. அருண்குமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியான திரைப்படம் சித்தா. சித்தார்த், மலையாள நடிகர் நிமிஷா சஜயன் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். திபு நினன் தாமஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். சித்தார்த்தின் தயாரிப்பு நிறுவனமான எடாகி இந்தப் படத்தை தயாரித்துள்ளது.


சித்தா படத்தின் கதை


பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் சித்தா. மிக தீவிரமான ஒரு சமூக பிரச்சனையை எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் மிக நேர்த்தியாக கையாளப்பட்ட ஒரு படம் என்று சித்தா படத்தை சமூக வலைதளங்களில் விமர்சகர்கள் பாராட்டி வருகிறார்கள்.


தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் சித்தார்த் சித்தா படத்தின் மூலம் ஒரு நல்ல வெற்றியை பதிவு செய்திருக்கிறார். மேலும் இந்தப் படத்தை தானாக முன்வந்து தயாரித்ததற்காக பலர் அவரை பாராட்டி வருகிறார்கள். மேலும் இயக்குநர் அருண் குமார் இயக்குநராக எடுத்துக் கொண்டிருக்கும் பொறுப்பும் அனைவரின் மனதை கவர்ந்துள்ளது. சித்தா திரைப்படத்தை பார்த்து வரும் தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் சித்தா திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.


படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்






தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு  “ சித்தா திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. மிகத் தீவிரமான ஒரு கதையை முடிந்த அளவிற்கு மென்மையாகவும் தெளிவாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் அருண்குமார் மற்றும் இந்தத் திரைப்படத்தை தேர்வு செய்து அதை தயாரித்ததற்காக நடிகர் சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன்.” என்று கூறியுள்ளார் சிம்பு. இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் இணையத்தில் வைரலாகியுள்ளது.




மேலும் படிக்க : Asian Games 2023: தட்டித்தூக்கிய இந்தியா..! தங்கம் வெல்வதில் புதிய வரலாறு - ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அபாரம்


Chithha Movie Review: நெகிழ வைக்கும் உண்மைக்கதை... சித்தார்த் நடித்திருக்கும் 'சித்தா' திரை விமர்சனம்!