குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


ட்ரெய்லர் எப்படி



இதுவரை படம் தொடர்பாக வெளியான அனைத்து போஸ்டர்களிலும் சமந்தா புர்கா அணிந்து காணப்பட்டதால் படத்தில் இஸ்லாமிய வீட்டுப் பெண்ணாக நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்குதான் நமக்கு ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். முதல் சில நிமிடங்களில் பார்ப்பதற்கும் மீண்டும் ஒரு பம்பாய் படம் போல் தோன்றும் ட்ரெய்லர் மெல்ல தனது ட்ராக்கை மாற்றுகிறது.


பிராமண வீட்டுப் பெண்ணான சமந்தா விஜய் தேவரகொண்டாவை காதலிக்கிறார். தங்களது குடும்பத்தினரிடம் இருந்து வரும் எதிர்ப்புகளை சமாளித்து இருவரும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டுவதாக சபதம் எடுக்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லாம் சுமுகமாக தான் போகிறது, ஆனால்  நாட்கள் செல்ல செல்ல இவர்களுக்கு இடையில் புதிய பிரச்னைகள் உருவாக ஆரம்பிக்கின்றன.


இந்தப் பிரச்னைகளை எல்லாம் சமாளித்து மகிழ்ச்சியான ஒரு தம்பதியாக தங்களது குடும்பத்தினர்கள் முன்பு வாழ்ந்து காட்டுமா இந்த ஜோடி  என்பதே இப்படத்தின் கதை. ரொமாண்டிக் காமெடியாக உருவாகி இருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு வழக்கமான படங்களைத் தாண்டி புதிதாக ஏதாவது சொல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு










 ஹிட்டான  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரோஜா பாடல்


முதலில் காஷ்மீரில் தொடங்கிய இந்தப் படத்தின் ஷூட்டிங், பின்னர்  ஹைதராபாத், அலப்பி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் இடையே பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படப்பிடிப்பு தடைபட்டது. 


இந்நிலையில் குஷி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘என் ரோஜா நீயா’ பாடல் ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றன.


குஷி


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் குஷி படம் உருவாகி வரும் நிலையில், ஷிவ நிர்வாணா இப்படத்தை  இயக்குகிறார். சச்சின் கெதெக்கர், ராகுல் ராமக்கிருஷ்ணா உள்ளிட்டோர் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். வருகின்ற செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது குஷித் திரைப்படம்


மேலும் படிக்க: Ethir Neechal Aug 9 Promo: வக்கீல் கொடுத்த புது ஐடியா ஒர்க் அவுட் ஆகுமா? ஜீவானந்தத்தை சந்திக்க போகும் ஜனனி... எதிர் நீச்சலில் என்ன நடக்கப் போகுது?