தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவரின் தீவிர ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டியது, அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இவர் ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்தியராஜ், சரத்குமார் என டாப் நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்கள் உடன் நடித்துள்ளார் குஷ்பு.
தமிழ் மற்றும் தெலுங்கை தாண்டி, இவர் இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குநர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். குஷ்பு - சுந்தர் சி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்த குஷ்பு திருமணத்திற்கு பின் ஹீரோவுக்கு அக்கா கதாப்பாத்திரம், சீரியல்கள் உள்ளிட்டவற்றில் நடித்து வந்தார். தற்போது நடிகை குஷ்பு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வரும் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள குஷ்பு அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை பகிர்வது வழக்கம். சில வருடங்களுக்கு முன் இவர் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக காணப்பாட்டார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரனாது, தற்போது தன்னுடைய புதிய ஹேர் ஸ்டைல் புகைப்படம் ஒன்றை குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் மாற்றம் வரவேற்கத்தக்கது மற்றும் நிலையானது என்றும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் இது புதிய ஹேர் ஸ்டைலா? அல்லது விக்கா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
எப்போதும் மீடியமான அளவு தலைமுடியுடன் ப்ரீ ஹேர், மற்றும் கொண்டையில் காணப்படும் குஷ்பு, தற்போது டாம் பாய் லுக் கொடுக்கும் வகையில் தனது தலை முடியை வெட்டியுள்ளார் குஷ்பு. இந்த ஹேர் ஸ்டைலில் இவர் வெளிநாட்டு பெண்மணி போன்று தோற்றமளிக்கிறார். இந்த ஹேர் ஸ்டைலில் குஷ்பு மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறார்.
மேலும் படிக்க
Nayanthara Thani Oruvan 2 :தனி ஒருவன் பாகம் இரண்டிலும் இணைகிறாரா நயன்தாரா? வெளியான புதிய தகவல்...