மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து, 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்’. இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். அரவிந்த் சாமி வில்லனாக மிரட்டியிருந்தார். தம்பி ராமையா, நாசர், ஹரிஷ் உத்தமன், க உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி  இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. 


இந்தப்படம் வெளியாகி 28-ஆம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அன்றைய தினத்தில் இப்படத்தின் 2-ஆம் பாகத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் 2-ஆம் பாகத்திலும் நடிகை நயன்தாராவே நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  மேலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க பெரிய நடிகர் ஒருவரிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.  தனி ஒருவன் பார்ட் 1-ல் நடிகர் வில்லன் கதாப்பாத்திரத்தில் மாஸாக நடித்து அசத்தி இருந்தார். சொல்லப்போனால் ஹீரோவுக்கு நிகரான முக்கியத்துவம் அப்படத்தில் வில்லனுக்கும் இருந்தது. எனவே அவருக்கு நிகரான ஒரு நடிகரையே பார்ட் 2-விலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 


நடிகை நயன்தாரா எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாப்பாத்திரத்தில் கன கச்சிதமாக பொருந்த கூடியவர். அவர் நடித்துள்ள ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இத்திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. 


திருமணத்திற்கு பின்பு நடிகை நயன்தாராவின் மார்க்கெட் இனி அவ்வளவு தான் என சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். ஆனால்,  தற்போது நடிகை நயந்தாராவின் கைவசம் 9க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ரத்னகுமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் தனக்கென்று முக்கியத்துவம் உள்ள ரோலில் நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் அவர் நாயகியாக நடிக்க உள்ளதாகவும், நிவின் பாலியுடன் டியர் ஸ்டுடென்ட்ஸ் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த வரிசையில் தற்போது தனி ஒருவன் பாகம் 2 திரைப்படமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க


Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்கள்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...எந்தெந்த மாவட்டங்களில்?


Crime: 17 வயது சிறுமி.. கோடாரியால் வெட்டிக் கொலை செய்த தந்தை, சகோதரர்கள்..! கொடூரத்தின் பின்னணி என்ன?