தனுஷ் மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான குபேரா படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
குபேரா ரிலீஸ் தேதி:
சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வரும் மிகவும் எதிர்ப்பார்க்கபட்ட திரைப்படமான குபேரா திரைப்படம் வருகிற ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழு இன்று தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டது.
தனுஷ் மற்றும் நாகர்ஜுனாவுடன் இணைந்து, ஜிம் சர்ப் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் குபேராவில் நடிக்கின்றனர். தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இடையேயான முதல் கூட்டணியில் உருவாகும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: Coolie Update : தலையை திருப்பிய பூஜா ஹெக்டே! இது தான் உங்க அப்டேட்டா.. என்ன பாஸ் இதெல்லாம்!
கதைக்களம்:
குபேரா படத்தின் கதைக்களம் குறித்து ஊகங்கள் பரவலாக உள்ளன, இந்த படத்தில் தனுஷ் ஒரு பிச்சைக்காரனாக நடித்துள்ளார் என்றும் பின் அவர் ஒரு மாஃபியா ராஜாவாக மாறக்கூடும் என்றும் சினிமா வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில், நாகார்ஜுனா ஒரு விசாரணை அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், தயாரிப்பாளர்கள் இந்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இதையும் படிங்க:அந்த ஒரு வார்த்த சொன்னா ரஜினி வேற ஒருத்தரா மாறிடுவார்...கூலி பட அனுபவத்தை பகிர்ந்த நடிகர் செளபின்
குபேரா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார், சமீபத்தில் அவர் இசையமைத்த ' தண்டேல்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் திரைக்கதையை சைதன்யா பிங்காலி இணைந்து எழுதியுள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் பேனாரின் கீழ் சுனில் நரன் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.