கூலி

ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறர் . சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் , உபேந்திரா , சத்யராஜ் , செளபின் சாஹிர், நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். பூஜா ஹெக்டே சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் அனிருத் இசையமைக்கிறார். கூலி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தில் உள்ள கதாபாத்திரங்களை பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கூலி பட அனுபவத்தை பகிர்ந்த செளபின் 

தமிழ் , மலையாளம் , தெலுங்கு , கன்னடன் என நான்கு மொழிகளில் இருந்தும் முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இதனால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. குறிப்பாக மலையாள நடிகர் செளபின் இந்த படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாக இருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கூலி படத்தில் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவத்தை செளபின் பகிர்ந்துகொண்டுள்ளார்

' ரஜினி சார் நிறைய விஷய்ங்களில் எடுத்துக்காட்டாக இருப்பார். ஆடை மாற்றுவது , சாப்பிடுவது தவிர அவர் கேரவானுக்கு போக மாட்டார். நைட் ஷூட் என்றாலும் மழை என்றாலும் செட்டில் தான் நிற்பார். அவர் செட்டில் நிற்கும் போது மற்றவர்கள் எல்லாரும் அலர்ட்டாக இருப்பார்கள். டேக் என்று சொன்னால் ரஜினி வேற ஒரு ஆளாக மாறிவிடுவார். அந்த வகையில் அவர் ஒரு ஸ்டைல் மன்னனாக மாறிவிடுவார்" என செளபின் தெரிவித்துள்ளார்

கூலி படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தையும் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது.அனிருத் இசையமைக்கிறார்.