2025 சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து இங்கிலாந்து அணியை வெளியேற்றி ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி அளித்தது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி புள்ளிப்பட்டியலில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்து இருப்பதை இதில் காணலாம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர்:
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் மாடல் முறையில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று குரூப் பி பிரிவில் நடந்த முக்கியமான போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின, இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது. இங்கிலாந்து இப்போது தனது கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடவுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்:
லாகூரில் நாளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், குரூப் பியில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறும், ஆஸ்திரேலியாவுக்கு மூன்று புள்ளிகளுடன் போட்டியை விட்டு வெளியேறிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அந்த பின்னர் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பெரிய ரன்கள் வித்தியாச அளவில் வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே ஆஸ்திரேலியே அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும், அதனால் ஆப்கானிதான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டி காலிறுதி நாக் அவுட் போட்டியாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
சாம்பியன்ஸ் டிராபி குரூப் ஏ புள்ளி பட்டியல்:
அணி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | ரன் ரேட் |
நியூசிலாந்து | 2 | 2 | 0 | +0.863 |
இந்தியா | 2 | 2 | 0 | +0.647 |
வங்காளதேசம் | 2 | 0 | 2 | -0.443 |
பாகிஸ்தான் | 2 | 0 | 2 | -1.087 |
சாம்பியன்ஸ் டிராபி குரூப் ஏ புள்ளி பட்டியல்:
அணி | போட்டிகள் | வெற்றி | முடிவு இல்லை | தோல்வி | ரன் ரேட் |
தென்னாப்பிரிக்கா | 2 | 1 | 1 | 0 | +2.140 |
ஆஸ்திரேலியா | 2 | 2 | 1 | 0 | +0.475 |
ஆப்கானிஸ்தான் | 2 | 1 | 0 | 1 | -0.990 |
இங்கிலாந்து | 2 | 0 | 0 | 2 | -0.305 |
குரூப் பி பிரிவில் நடைபெறும் கடைசி குரூப் போட்டிகள் அரையிறுதிப் போட்டிக்கான அணிகளை தீர்மானிக்கும். ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் முதலிடம் பிடிக்கும் அணி மற்ற குரூப்பிலிருந்து இரண்டாவது அணியை எதிர்கொள்ளும். ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் தங்கள் சொந்த ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தினால், இந்தியா குரூப் ஏ அணியை முதலிடம் பிடித்தால், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள நேரிடும். ஒரு வேளை ஆஸ்திரேலிய அணி தகுதி பெறவில்லை என்றால் அதற்கு பதிலாக ஆப்கான் அணியும் மோத வாய்ப்புள்ளது. ஒரு வேளை, குரூப் ஏ பிரிவில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தால், அவர்கள் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.