Coolie Update : தலையை திருப்பிய பூஜா ஹெக்டே! இது தான் உங்க அப்டேட்டா.. என்ன பாஸ் இதெல்லாம்!
Coolie Update : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடைப்பெறும் கூலி திரைப்படத்தின் புதிய அப்பேட் இன்று வெளியாகியுள்ளது.
கூலி திரைப்படம்:
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகர்ஜூனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் , உபேந்திரா , செளபின் சாஹீர் , ஆமீர் கான் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது, அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
அனிருத் இசையமைத்து அறிவு பாடியுள்ள சிகிடு என்கிற பாடலின் குட்டி க்ளிம்ப்ஸ் ஒன்றை ரஜினிகாந்த் பிறந்தநாளன்று படக்குழு வெளியிட்டது. இதன் பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு பாங்காக் மற்றும் சென்னையில் நடைப்பெற்றது.
இதையும் படிங்க: அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
புதிய அப்டேட் டீ கோட் செய்த ரசிகர்கள்:
இந்த நிலையில் கூலிப்படத்திற்கான புதிய அப்டேட் இன்று(27.02.25) காலை 11 மணிக்கு வெளியாகும் என்று ஒரு அறிவிப்பு போஸ்டர் வெளியானது, அந்த நடிகை ஒருவர் சிவப்பு உடையிலும் முகமானது தலை முடியால் மறைக்கப்பட்டு இருந்தது, ஆனால் ரசிகர்கள் இந்த போஸ்டர் வெளியானது அது யார் என்பதை மிக சுலபமாக கண்டுபிடித்துவிட்டனர். அது வேறு யாரும் இல்லை நடிகை பூஜா ஹெக்டே தான் இதற்கு ஒரு அப்டேட்டா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர்.
நீங்க கண்டுபீடிச்சிடீங்க:
இன்று காலை (27.02.25) கூலி படத்தின் அப்டேட் வெளியானது. ரசிகர்கள் கணித்தது போலவே இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளதாக படக்குழுவானது அறிவித்தது.
காவாலா போன்ற பாடல்:
கூலி படத்தில் காவாலா பாடல் போன்று ஒரு பாடல் இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளிவந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக பூஜா ஹெக்டேவின் போஸ்டர் வெளியாகி அதனை உறுதிப்படுத்தியுள்ளது.