இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உள்ள RC15 படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தியன் 2 படத்தை எடுக்கும் முயற்சியில் இருந்த இயக்குநர் ஷங்கர் அதில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக படத்தை கிடப்பில் போட்டுள்ளார். இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் தெலுங்கின் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரணை வைத்து புதிய படம் இயக்க உள்ளார் இந்தப் படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜூ தயாரிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தை RC15 என்று அழைத்து வருகிறார்கள்.
சமீபத்தில், இந்தப் படம் தொடர்பாக, ராம் சரணும், தயாரிப்பாளார் தில் ராஜூவும் ஷங்கரை சந்தித்து பேசினார்கள். இந்தப் படம் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் ராம் சரண் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். கியாரா அத்வானி பிறந்தநாள் இன்று. அதையொட்டி, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பான் இந்தியா படமாக இந்தப் படம் உருவாக உள்ளது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
ஷங்கர் இந்தப் படத்தை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து, அந்நியனின் ரீமேக்கை உருவாக்க உள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் "என்னை விட மிகவும் சந்தோஷமாக யாரும் இருக்கமுடியாது , முன்பை விட இன்னும் மிக பிரமாண்டமான படைப்பாக இந்த படம் இருக்கக்கூடும் . அந்நியனின் ரீமேக் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார் " என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .
Yashika health update: தேறி வரும் யாஷிகா... சாதாரண வார்டுக்கு மாற்றம்! வீடு திரும்புவது எப்போது?