கார் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த நடிகை யாஷிகா, சாதாரணா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர் நலமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement


செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு நடிகை யாஷிகா ஆனந்த், ஹைதராபாத்தைச் சேர்ந்த பவனி என்ற பெண் தோழி மற்றும் சையது, அமீர், ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு, யாஷிகா ஆனந்தின்,  நண்பர்களும் அங்கு நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். பின்பு பாண்டிச்சேரியிலிருந்து  கடந்த 24ஆம் தேதி இரவு  தனது நண்பர்களுடன் சென்னை  கிழக்குக் கடற்கரை சாலை வழியாக  சென்னை நோக்கி சென்றுள்ளனர். காரை யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சூளேரிக்காடு பகுதியில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நடிகையின் பெண் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள விபத்து முதலுதவி சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.


இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நடிகை யாஷிகாவிற்கு இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


நேற்று முன்தினம் நடிகை யாஷிகாவுக்கு கால் மற்றும் இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. கடந்த ஐந்து நாட்களான தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த யாஷிகா நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தற்போது, அவர் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.




இந்தநிலையில், மாமல்லபுரம் போலீசார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று யாஷிகா மற்றும் இரண்டு ஆண் நண்பர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இதில், சீட் பெல்ட் அணியாததே உயிரிழப்பிற்கு காரணம் என முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது. யாஷிகா உடல் சரியாகி வீட்டிற்கு சென்றதும் உரிய விசாரணை மேற்கொண்டு தேவை என்றால் அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து  செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர், இருட்டு அறையில் முரட்டு குத்து, ராஜ பீமா, இவன் தான், நோட்டா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் "கடமை செய்" ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும், குறைந்த அளவில் படங்கள் நடித்திருந்தாலும், யாஷிகா சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருவதால், அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ABP Desam: உதயமானது 'ஏபிபி தேசம்'