இணையதளத்தில் தற்பொழுது பயங்கர வைரலாகி இருப்பவர் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 26 வயது நிரம்பிய  சைக்ஹோம் மீராபாய் சானு பளுதூக்கும் வீராங்கனை . இந்தியாவிற்கான 49 கிலோ பிரிவில் போட்டியிட்ட சானு 202  கிலோ எடை வரை தூக்கி , இறுதி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து , இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்தவர் .




'டோக்கியோவில் நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை வென்று பெருமை சேர்ந்தவரும் மீராபாய் சானுதான்  .தற்பொழுது டோக்யோவிலிருந்து தனது சொந்த ஊரான மணிப்பூருக்கு திரும்பியுள்ள இந்தியாவின் வெற்றி மகளான மீராபாய் சானுவை பல அரசியல் தலைவர்கள் , சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் நேரிலும் மற்றும் அவரது ட்விட்டர் கணக்கு மூலமாக வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் , சாமானிய மக்களும் அவருக்கு , வாழ்த்து தெரிவிக்கும் வகையில் , வேலூர் மண்டல அஞ்சல் துறையினர் ஒரு பிரத்யேக சேவையை  தொடங்கிவைத்துள்ளனர் .




அதன்படி , இந்தியாவின் வெற்றிமகள் மீராபாய் சாணுவிற்கு வாழ்த்து செய்தி அனுப்ப விருப்பமுள்ளவர்கள்  யார் வேண்டுமானாலும், வேலூர்  மாவட்டத்தில்  செயல்படும் , தலைமை , துணை மற்றும் கிளை தபால் நிலையங்களிலும் , பத்து ரூபாய் செலுத்தினால் , பணம் செலுத்துபவர் பெயர் , முகவரியுடன் , அவர் அனுப்பும் வாழ்த்து செய்தியம் , நேரடியாக , சானுவின் வீடு அமைந்திருக்கும் , மணிப்பூர் மாநிலம் லாம்லாங்கில் செயல்படும் தபால் நிலையத்தின் மூலமாக , இங்கிருந்து அனுப்படும் வாழ்த்து செய்தியை  ஒரு  A4 பேப்பரில் பிரிண்ட் அவுட் எடுத்து சானுவின் வீட்டு முகவரியில் ஒப்படைக்கப்படும் .


இந்த சேவைக்காக  நேற்று வேலூர் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் பிரத்யேக இ-போஸ்ட் கவுன்ட்டர் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது . வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ளவர்கள் தலைமை தபால் நிலையத்தில் துவங்கப்பட்டுள்ள இந்த பிரத்தியேக கவுன்ட்டர் மூலமாகவும் , மற்றும்  வேலூர் மாவட்டத்தின் பிற பகுதியை சேர்ந்தவர்கள்  வேலூர் மண்டலத்திலுள்ள , 45 துணை அஞ்சல் அலுவலகம் , மற்றும் 105  கிளை அஞ்சல் அலுவலகங்களில் இருந்தும் மீராபாய்க்கு இ-போஸ்ட மூலம் வாழ்த்துக்கள் அனுப்பலாம் .




இது தொடர்பாக , ABP நாடு செய்தி குழுமத்திடம் பேசிய , வேலூர் மண்டல தபால் நிலையங்களின்  , கோட்ட கண்காணிப்பாளர் கோமல் குமார் கூறுகையில், "வேலூர் தலைமை தபால் நிலையத்தில் நேற்று ஜூலை 29 ஆம் தேதி ,   இந்த பிரத்யேக கவுன்ட்டர்யை போஸ்ட்மேனாக  பணியாற்றி வரும் லத்தேரியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்.


விளையாட்டில் குறிப்பாக பளுதூக்கும் போட்டியில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர் ,  தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.  விளையாட்டு இட ஒதுக்கீட்டின் மூலம் தபால்துறையில் பணியில் சேர்ந்துள்ளார் .எனவே பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்றுள்ள சாணுவிற்காக ஆரம்பிக்கப்படும் இந்த கவுன்ட்டர்யை இவர் திறந்து வைத்தால் தான் சரியாக  இருக்கும் என்று எண்ணி தமிழ் செல்வனை கொண்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது .




 


 நேற்று முன்தினம் தொடங்கி சனிக்கிழமை வரை மூன்று நாட்கள் வெற்றி மகள் சானுவிற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் , இ போஸ்ட் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பலாம் . நேற்று முன்தினம்  தொடங்கப்பட்ட இந்த பிரத்யேக சேவை மூலம்  இது வரை மணிப்பூர் மாநிலம் லாம்லாங்-கில் உள்ள சாணுவிற்கு   491 வாழ்த்துக்கள் , இ போஸ்ட் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது , என்று தெரிவித்த கோமல் குமார் .




தற்பொழுது முதல் கட்டமாக , சாணுவிற்காக பிரத்யேக இ-போஸ்ட் கவுன்ட்டர் திறந்துள்ள நிலையில் , இதற்கு போதிய வரவேற்பு கிடைத்தால் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நிறைவடையும் வரை , விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் , மற்றும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு இ போஸ்ட் மூலம் வாழ்த்துத் தெரிவிக்கும் சேவை தொடர்ந்து நடத்தப்படும்" என்று தெரிவித்தார் .