லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் 2022 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகும். கமல்ஹாசன், ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி நடித்த த்ரில்லர் திரைப்படம் முழுவதும் பார்வையாளர்களை இருக்கை நுனியில் வைத்திருப்பதை உறுதி செய்துள்ளது. இயக்குனர் தனது முந்தைய படமான கைதியில் இருந்து கிராஸ்ஓவரைப் பயன்படுத்தியுள்ளார்.  இது மார்வல் சினிமாடிக் யுனிவர்ஸில் இருந்து ஈர்க்கப்பட்டு பார்வையாளர்களை லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்று குறிப்பிட வழிவகுத்தது.




கைதி படத்தில் இருந்து நரேன், ஹரிஷ் உத்தமன் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் நடிகர் சூர்யா சுருக்கமான ஆனால் முக்கியமான கேமியோ ரோலில் நடித்திருப்பதால், படம் பார்வையாளர்களை ஆச்சரியங்களின் ரோலர் கோஸ்டருக்கு அழைத்துச் செல்வதில் வெற்றி பெற்றது.


கமல்ஹாசன், ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்புடன் பார்வையாளர்கள் நடிப்பு விருந்துக்கு ஆளாகினர், மேலும் சூர்யாவைச் சேர்ப்பது படத்தை மேலும் சிறப்பித்தது. சினிமா காட்சிகள் சர்வதேச படங்களுக்கு இணையாக ஒவ்வொரு காட்சிகளும் மிகத் துல்லியமாக எடுக்கப்பட்டிருந்தது. அன்பரிவின் சண்டைக் காட்சியும், அனிருத்தின் அனல் பறக்கும் ஒலிப்பதிவும் படத்திற்கு கூடுதல் புள்ளிகளைச் சேர்த்து, படத்தை வேறொரு நிலைக்கு கொண்டு செல்ல உதவுகின்றது.




Also Read | Srilanka Crisis: இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்க நியமனம்...சபாநாயகர் அறிவிப்பு


பல இயக்குனர்கள் மற்றும் பிரபலங்கள் விக்ரம் படக்குழுவினர் மற்றும் நடிகர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ள நிலையில், தற்போது பிரசாந்த் நீலும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். கேஜிஎஃப் இயக்குனர் நேற்று ட்விட்டரில் படத்தின் குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது,




”#விக்ரம் படத்தின் மொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள். @ikamalhaasan சார், @VijaySethuOffl மற்றும் #FahadhFaasil ஆகியோரை ஒன்றாகப் பார்த்தது ஒரு விருந்தாக இருந்தது. @Dir_Lokesh உங்கள் பணிக்கு எப்போதும் பெரிய ரசிகன். நீங்கள் ஒரு ராக்ஸ்டார் @anirudhofficial. @அன்பரிவ், நீங்கள் இருவரும் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்! இன்னும் #ரோலெக்ஸை காட்சியிலிருந்து மீட்க முடியவில்ல்லை. @Suriya_offl”.


பிளாக் பஸ்டர் ஹிட் படமான கேஜிஎஃப் 2-ஐ பார்வையாளர்களுக்கு  பரிசலித்த பிறகு, நீல் பிரசாந்த் தற்போது பிரபாஸ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்த 'சலார்' படத்தை இயக்கி வருகிறார்.