இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கே.ஜி.எப். இரண்டாம் பாகம் கடந்த 14-ந் தேதி ரிலீசாகியது. படத்திற்கு கிடைத்த ரசிகர்களின் அமோக ஆதரவால் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. மிக குறைந்த நாட்களில் கே.ஜி.எப். 2ம் பாகம் 1000 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது. கே.ஜி.எப். 2 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் வெளியாகிய இந்த படம் வெளியாகிய மொழிகளில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு யூ டியூப்பில் கே.ஜி.எப். 2 திரைப்படத்தை மர்மநபர்கள் முழுவதும் அப்லோட் செய்துள்ளனர்.
யூ டியூப்பில் வெளியிடப்பட்ட கே.ஜி.எப். படம் இந்தி மொழியில் டப் செய்யப்பட்டது ஆகும். இதையடுத்து, இணையவாசிகள் சிலர் இதை டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் அதிர்ச்சியடைந்து தகவலை பகிர்ந்தனர். இதையடுத்து, படத்தின் தயாரிப்பு .நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையின்படி யூ டியூப் இதை நீக்கியது.
மேலும், கே.ஜி.எப். 2ம் பாகம் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சில இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கே.ஜி.எப். திரைப்படம் இந்தியில் மட்டும் 300 கோடிக்கு மேல் வசூலை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கே.ஜி.எப். 2ம் பாகத்தின் வெற்றியால் இந்தி திரைப்பிரபலங்கள் பலரும் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யஷ் நாயகனாக நடித்துள்ள கே.ஜி.எப். பாகம் 1 திரைப்படமும் இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கே.ஜி.எப். 2ம் பாகம் திரைப்படம் திடீரென யூ டியூப்பில் வெளியானதால் படக்குழுவினர் மட்டுமின்றி கே.ஜி.எப். ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் படிக்க : Singer sonu nigam: தமிழுக்கு ஆதரவாக இந்தியில் இருந்து ஒரு குரல்! இந்திக்கு எதிராக கொந்தளித்த பாலிவுட் பாடகர்!
மேலும் படிக்க : எப்போதுமே ஐதராபாத்..வயிற்றில் அடிக்காதீங்க.! அஜித்துக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்த செல்வமணி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்