ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 48வது ஆட்டத்தில் பலம் மிகுந்த குஜராத் அணியை பஞ்சாப் அணி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கு அறிமுக அணியாக குஜராத் அணி களமிறங்கினாலும் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்து வருகிறது.


குஜராத் அணிக்கு தொடக்க வீரர்கள் சுப்மன்கில், சஹா நல்ல தொடக்கத்தை அளித்து வருகின்றனர். அந்த அணியின் மிகப்பெரிய பலமாக டேவிட் மில்லர் தற்போது விளங்கி வருகிறார். இக்கட்டான போட்டிகளில் அதிரடியாகவும்,பொறுப்புடனும் ஆடி குஜராத்தை மீட்டெடுக்கிறார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஒன் டவுன் வீரராகவும் பொறுப்புடன் ஆடுகிறார். மிடில் ஆர்டரில் களமிறங்கியும் அணிக்கு தனது பேட்டிங்கில் பெரும்பங்கு வகிக்கிறார்.




டேவிட் மில்லரைப் போல அந்த அணியின் ராகுல் திவேதியாவும் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். இந்த தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஏற்கனவே மோதிய போட்டியில் கடைசி இரு பந்தில் இரு சிக்ஸர் அடித்து குஜராத்தை ராகுல் திவேதியா வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷீத்கான் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்குகிறார். இவர்களுடன் அபினவ் மனோகர் மிடில் ஆர்டரில் ஒத்துழைக்கிறார். முகமது ஷமி, பெர்குசன் இருவரும் வேகத்தில் பக்கபலமாக உள்ளனர்.


குஜராத் அணியுடன் ஒப்பிடும்போது பஞ்சாப் பலம் குறைந்த அணியாக காணப்பட்டாலும், பஞ்சாப் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வாலும், ஷிகர் தவானும் அதிரடியான தொடக்கத்தை அளிக்க வேண்டியது அவசியம். லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.


ஜானி பார்ஸ்டோ இன்னும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தமிழக வீரர் ஷாரூக்கானும் தனது வாய்ப்பை பிரகாசமாக பயன்படுத்திக் கொண்டால் பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய ரன் கிடைக்கும். பனுகா ராஜபக்சே அதிரடியை காட்ட வேண்டியது அவசியம். அதேபோல, ஓடீன் ஸ்மித் அதிரடியாக ஆடினால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் எகிறும். விக்கெட் கீப்பர் ஜிதேஷ்சர்மாவும் அதிரடியில் கலக்குவார் என்பதால் நிச்சயம் பஞ்சாப் நெருக்கடி அளிக்கும்.




பஞ்சாப் அணியின் பந்துவீச்சுக்கு ரபாடா மிகப்பெரிய பலம் ஆவார். அவருக்கு வேத்தில் வைபவ் ஆரோரா, அர்ஷ்தீப்சிங் ஒத்துழைக்க வேண்டும். சுழலில் ராகுல் சஹார் எதிரணிக்கு நெருக்கடி அளிப்பார். கடந்த முறை குஜராத்திடம் அடைந்த தோல்விக்கு பஞ்சாப் அணி இந்த போட்டி மூலம் பழிக்கு பழி தீர்க்குமா? அல்லது குஜராத்தின் ஆதிக்கம் தொடருமா? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.  


9 போட்டிகளில் ஆடியுள்ள குஜராத் ஒரே ஒரு தோல்வி மட்டுமே அடைந்து 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 9 போட்டிகளில் ஆடி 4 வெற்றிகள் 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண