ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற காவாலயா பாடல் 100 மில்லியன் வியூவ்சை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்பாடல் வெளியானது முதலே ஏராளமானோர் இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பாடல் 100 மில்லியன் வியூவ்சை கடந்துள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. 






சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் முன்னணி நடிகர்களான மோகன்லால், சிவராஜ் குமார், மற்றும் தெலுங்கு நகைச்சுவை நடிகர் சுனில்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.  ‘காவாலா’ பாடல் , ஹூக்கும் பாடலைத் தொடர்ந்து ஜூஜூபி பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில், ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டன.


ஆக்‌ஷன் படமாகத் தயாராகி வரும் இந்த படம் தமிழ்நாட்டைத் தவிர அனைத்து மாநில திரையரங்குகளிலும் சிறப்பு மற்றும் அதிகாலை காட்சி திரையிடுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் முதல் காட்சி காலை 9 மணியிலிருந்து தொடங்குகிறது.  இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


இன்னொரு சுவாரஸ்யம் இதோ இருக்கு:


Karuththarajapalayam: கான்க்ரீட் வீடு வேணாம், உசுறுதான் முக்கியம்.. படிகட்டுக்கு நோ, தச்சர்களே இல்லாத கருத்தராஜபாளையம் - சாமி குத்தம்னு பதறும் மக்கள்


இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் கூறிய குட்டி கதை  இணைத்தில் வைரலாகி வருகிறது.  இந்த கதையால், இணையத்தில் ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கு இடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. ரஜினி தான் எப்போதும் சூப்பர் ஸ்டார் என அவரின் ரசிகர்கள் மீம்களை தெரிக்க விடுகின்றனர். விஜய் ரசிகர்களோ அவர்களுக்கு பதில் கொடுத்து வருகின்றனர். இணையமே குட்டிக்கதையால் கொந்தளித்து போயுள்ள நிலையில், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் இந்த குட்டி ஸ்டோரிக்கு பதில் அடி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.  எது எப்படியோ இந்த குட்டிக்கதை ஜெயிலர் பட ரிலீஸ் மீதான ஆர்வத்தை அதிக்கப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க 


World Archery Championship 2023: 42 ஆண்டுகால காத்திருப்பு.. தங்கம் வென்ற இந்திய அணியின் மங்கைகள்.. மெக்சிகோவை வீழ்த்தி புதிய வரலாறு படைப்பு!