ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் தரப்பில் எத்தனை பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகினர் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஹாலன் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை அதாவது நேற்று (04/08/2023) மாலை இந்த என்கவுன்டர் தொடங்கியது. இது இராணுவமும் காவல்துறையினரும் இணைந்து இந்த என்கவுன்டர் மேற்கொண்டுள்ளனர்
தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதால், தீவிரவாதிகள் தரப்பில் இருந்து ராணுவத்தினர் மீது கடும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டினால் மூன்று ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
குல்காமில் உள்ள ஹலானின் உயரமான பகுதிகளில் தீவிரவாதிகள் இருப்பதாக வந்த ரகசிய தகவல்களின் பேரில், 04 ஆகஸ்ட் 23 அன்று பாதுகாப்புப் படையினரால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில், மூன்று ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயத்தால் அதிகப்படியான ரத்தம் வெளியேறிக்கொண்டு இருந்ததால் மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர். தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிக்கு கூடுதலாக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் இரண்டு வெவ்வேறு தாக்குதல்கள் மற்றும் என்கவுன்டர்களில் ஐந்து உயரடுக்கு கமாண்டோக்கள் உட்பட 10 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்றுள்ள தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்கள் விபரம் குறித்து இந்திய ராணுவம் இன்னும் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.